சந்தேகம்

  • 14

வாழ்க்கை எனும் பொய்கையிலே
சந்தேகசாக்கடை கலக்க
நம் கணவன்மனைவி உறவது
சண்டைகளால் கசக்க
மணவாழ்க்கையையே என்மனம்
வெறுக்கிறது
மணவாளனே உன்னால் மனம் வலிக்கிறது

படித்தபடிப்பிற் கெனக்கு வேலை
எனை கதறவிடுவதே உனக்கு வேலை
வேலைக்குபோகுமெனை நீ சந்தேகப்பட்டால்
வெயிலிலே வேகுமுனை
நானென்ன செய்வது?
கூலி செய்தாலும் எனை
காப்பாற்றும் திறமை உனக்கு.
கணவனின் கஸ்டத்தில்
பங்கேற்கும் உரிமை எனக்கு.

எத்தனையாண்களைக் கண்டாலும்
என்உள்ளம் நினைப்பது உன்னைதான்
என்வாழ்க்கையில் உதித்த வானவிலே
நீயிலா வாழ்க்கை விஷம் தான்!

உன் சந்தேகத்தை உணர்ந்தவுடன்
உணர்விழந்தவளாகிவிட்டேன்
உண்மையை உனக்கு உணர்த்தியும்
உணரா வுன்னால் நொந்துவிட்டேன்

பட்டதாரிபட்டம் பல்கலைக்கழகம் தர
மனைவிப்பட்டம் நீ தர
பத்தினிப்பட்டம் யார் தருவார்?
பயந்து பயந்து வாழுமென்னை
படைத்தவன் அவனே அறிந்திடுவான்

என்தூய்மை ஒப்புவிக்க
சத்தியத்தை நான் காட்டுறேன்
உன் உள்ளம் கறைபடிய
சந்தேகத்தை நீ நீட்டுறாய்
எனைக் கரம்பிடித்தவனே கேள்!
என் மனம் உடைத்தவனே கேள்!

உன் கோபங்களும் மாற்றங்களும்
மெளன பூகம்பமாய் தாக்க
கண்ணீரை மருந்தாக்கி
தினமும்நான் குடிக்கிறேன்
பிறந்தவீட்டுச் சொந்தங்களிடம்
எந்நிலையை மறைக்கிறேன்

வேண்டாம்!
சந்தேகம் வேண்டாம்!
உன் சந்தோச வாழ்க்கையை
சண்டைகளாய் மாற்றிவிடும்
சைத்தானின் சதிதான் சந்தேகம்

சந்தேகம் வந்துவிட்டால்
சண்டைகள் தோன்றி விடும்
சண்டைகள் தோன்றிவிட
சந்தோசம் தொலைந்துவிடும்
மணவாழ்க்கையை மனம்
வெறுத்து விடும்.

Rustha Salam

வாழ்க்கை எனும் பொய்கையிலே சந்தேகசாக்கடை கலக்க நம் கணவன்மனைவி உறவது சண்டைகளால் கசக்க மணவாழ்க்கையையே என்மனம் வெறுக்கிறது மணவாளனே உன்னால் மனம் வலிக்கிறது படித்தபடிப்பிற் கெனக்கு வேலை எனை கதறவிடுவதே உனக்கு வேலை வேலைக்குபோகுமெனை…

வாழ்க்கை எனும் பொய்கையிலே சந்தேகசாக்கடை கலக்க நம் கணவன்மனைவி உறவது சண்டைகளால் கசக்க மணவாழ்க்கையையே என்மனம் வெறுக்கிறது மணவாளனே உன்னால் மனம் வலிக்கிறது படித்தபடிப்பிற் கெனக்கு வேலை எனை கதறவிடுவதே உனக்கு வேலை வேலைக்குபோகுமெனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *