மழலையின் புன்னகை
- by admin
- 343
நாம் கடந்து
செல்லும் பல
புன்னகை முகங்கள்
மனதை புண்ணாக்கிச்
செல்கின்றன.
நல்லவன் கெட்டவன்
அழகு அலங்கோலம்
சிவப்பு கறுப்பு
ஏழை பணக்காரன்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என தராதரம்
பார்த்து தான்
பலர்
புன்னகைக்கிறார்கள்.
பார்த்தாலே பரவசப்படுத்தும்
மழலையின் புன்னகை
பலதையும் கற்றுத்
தருகிறது.
நல்லவரா கெட்டவரா
அழகானவரா அலங்கோலமானவரா
உயர்ந்தவரா தாழ்ந்தவரா
கறுப்பா சிவப்பா
என்ற எந்த
பாகுபாடும் இன்றி
பார்த்தாலே ஈர்க்கும்
கள்ளம் கபடமற்ற
வெள்ளந்தியான
சிரிப்பு அது
அத்தனைப் பேரையும்
கட்டிப்போடுகிறது
அதன் பக்கம்.
மனப்பாரம்
குறைத்து நாமும்
ஒரு குழந்தை
என்பதை உணர்த்தி
செல்கிறது
மழலையின் மயக்கும்
புன்னகை.
கோபமான உள்ளங்களை
குஷிப்படுத்துகிறது
கடுமையான உள்ளங்களை
கனிய வைக்கிறது
அதிகாரமிக்கவர்களை
அடிபணிய வைக்கிறது
சாந்தமானவர்களை
சந்தோஷப்படுத்துகிறது
வலியோடிருப்பவர்களை
வருடிவிடுகிறது.
பாகுபாடு இன்றி
தராதரம் இன்றி
அத்தனைப் பேரையும்
அடிமைப்படுத்தும்
ஆச்சரியமான
அருமருந்து
மழலையின்
புன்னகை.
மழலையின்
அருகே மறந்து
போகும்
மற்றது எல்லாம்!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
நாம் கடந்து செல்லும் பல புன்னகை முகங்கள் மனதை புண்ணாக்கிச் செல்கின்றன. நல்லவன் கெட்டவன் அழகு அலங்கோலம் சிவப்பு கறுப்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என தராதரம் பார்த்து தான் பலர் புன்னகைக்கிறார்கள்.…
நாம் கடந்து செல்லும் பல புன்னகை முகங்கள் மனதை புண்ணாக்கிச் செல்கின்றன. நல்லவன் கெட்டவன் அழகு அலங்கோலம் சிவப்பு கறுப்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என தராதரம் பார்த்து தான் பலர் புன்னகைக்கிறார்கள்.…
215857 724334Really clear internet internet site , thanks for this post. 714485
649230 419659Immigration Lawyers […]the time to read or go to the content or sites we have linked to below the[…] 86989
887664 440166I see something genuinely interesting about your internet site so I saved to bookmarks . 780559
421177 949025I got what you mean , saved to my bookmarks , quite good site . 906344
395524 588104Hello! Ive been reading your web internet site for a although now and lastly got the courage to go ahead and give you a shout out from Kingwood Texas! Just wanted to say maintain up the very good function! 161005