இலட்சியம்

  • 9

எஸ்.குமரன்
இல்.15,
பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

வணக்கம்

எனது அருமை நண்பன் ராமுவுக்கு நான் இங்கு நலம் நீ நலமா?

எங்களுடன் கற்ற ரவி, கண்னண் ஆகியோரை நான் சமீபத்தில் சந்தித்தேன். நாம் கற்கும் காலத்தில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்த சேட்டைகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம்.

ராமு உனது மடல் சென்ற திங்கட்கிழமை கிடைக்கப் பெற்றது. அதில் உன் இலட்சியம் பற்றி நீ கூறி இருந்தவை என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருந்தது.

இதோ நண்பா! என் இலட்சியம் பற்றி கூறுகின்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு பாராளுமன்ற அமைச்சராக வருவதே என் இலட்சியம்.

நான் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டால் முதலில் எனது ஊர் மக்களின் தேவைகளை அறிந்து செவ்வனே நிறைவேற்றுவேன். எனது சமூகத்துக்காக நான் கம்பீரமாக குரல் கொடுப்பேன். எனது ஊர் பாடசாலைக்குச் சென்று மாணவச் செல்வங்களின் குறைகளை அறிந்து நிறைவேற்றுவேன். ராமு நாம் கற்கும் பொழுதில் ஆசிரியர்கள் மற்றும் வளப் பற்றாக்குறையால் நாம் அடைந்த மன வேதனையை ஏனைய மாணவர்கள் அடைய இடமளிக்க மாட்டேன்.

கொவிட்-19 போன்ற கொடிய நோயிற்கான மருந்தை வல்லரசு நாடுகளுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுப்பேன். எனது ஊரிலுள்ள அரசு மருத்துவ மனையில் வைத்தியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வேன். எல்லா இளைஞர்களுக்கும் விளையாட்டுத்துறையில் ஊக்கமளிப்பேன். வரிய குடும்பத்தில் வாழும் மக்களுக்கு சிறு கைத்தொழில் செய்வதற்கான நிதி உதவி பற்றி பாராளுமன்றத்தில் பேசுவேன்.

இன, மத பேதமின்றி நாட்டு மக்களுடன் சகோதரனாய் நடந்து கொள்வேன். இன்னும் பல சேவைகள் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எதிர் காலத்தில் இன்னும் பல சேவைகள் செய்து நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்து நாடாளுமன்ற நாயகனாக வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்

உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அருமை நண்பன்

எஸ்.குமரன்

Aqeel Samran
KL/AL- Fasiyathul Nasriyan’s Muslim Boys School
Grade 9F

எஸ்.குமரன் இல்.15, பிரதான வீதி, யாழ்ப்பாணம். வணக்கம் எனது அருமை நண்பன் ராமுவுக்கு நான் இங்கு நலம் நீ நலமா? எங்களுடன் கற்ற ரவி, கண்னண் ஆகியோரை நான் சமீபத்தில் சந்தித்தேன். நாம் கற்கும்…

எஸ்.குமரன் இல்.15, பிரதான வீதி, யாழ்ப்பாணம். வணக்கம் எனது அருமை நண்பன் ராமுவுக்கு நான் இங்கு நலம் நீ நலமா? எங்களுடன் கற்ற ரவி, கண்னண் ஆகியோரை நான் சமீபத்தில் சந்தித்தேன். நாம் கற்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *