திவ்யா கொலையாளியா?

  • 286

அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான்.

கொலை நடந்த இடத்தை பரிசீலித்த பொலிஸ் உளவுப் பிரிவிற்கு கொலைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை பார்த்தீபன் ஸேரின் கையடக்கத் தொலைபேசியைத் தவிர.

நகரத்தின் பிரபல ஆசிரியர் பார்த்தீபன் ஸேரை கொலை செய்த குழுவை கண்டுபிடிக்கும் நோக்கில் களத்தில் இறங்கிய பொலிஸ் உளவுப் பிரிவு பார்த்தீபன் ஸேரின் கையடக்கத் தொலைபேசியை பரிசீலித்ததில் பல மாணவர்களின் தொலைபேசி அழைப்புகள் இருந்தன.

ஒவ்வொரு மாணவர்களின் தொலைபேசியையும் பரீசிலித்ததில் திவ்யா செந்தூரனின் நாளந்த வட்ஸ்அப் அரட்டை பின்வருமாறு இருந்தது

“நீ உண்மையில் என்னை காதலிக்கிறாய் என்பதை நான் நம்பனுமாக இருந்தால் நீ இந்த உதவிய செய்யணும். பார்த்தீபன் ஸேரின் தொலைபேசி இலக்கம், அவர் ஸ்கூலுக்கு வருற கார்ட நம்பர், நிறம், டை(t)ம் எல்லாம் எனக்கு அனுப்பணும்.”

“வழமையாக அவரின் ரெட் கலர் கார்ல காலை 6:45 வீட்டிலிருந்து வெளிப்பட்டு 7:00 இற்கு பாடசாலை அடைகிறார்.”

இதனை தடயமாக வைத்து சந்தேகத்தின் பெயரில் திவ்யாவை விசாரிப்பதற்கு அழைப்பானை விடுக்கப்பட்டது.

திவ்யாவும் அவள் பெற்றோரும் பொலிஸ் உளவுப் பிரிவின் இரகசிய விசாரணையில் ஆஜரான போதே உண்மைகள் வெளித் தெரிய ஆரம்பித்தன.

“அன்று இரவு என்ன நடந்தது?” என பொலிஸ் உளவுப் பிரிவு கேட்ட கேள்விக்கு,

“நீ உண்மையில் என்னை காதலிக்கிறாய் என்பதை நான் நம்பனுமாக இருந்தால் நீ இந்த உதவிய செய்யணும். பார்த்தீபன் ஸேரின் தொலைபேசி இலக்கம், அவர் ஸ்கூலுக்கு வருற கார்ட நம்பர், நிறம், டை(t)ம் எல்லாம் எனக்கு அனுப்பணும்.” என்று வட்ஸ்அப் மெஸேஜ் வந்த அப்போது நான் ஸேருக்கு பாட டொவ்ட் ஒன்ற கேட்க கோல் எடுத்து அதோட இதையும் கேட்டன். அவன் கேட்பதன் பாரதூரம் தெரியாது.

இது பற்றி பெரென்ஸ்ஸிடம் கேட்கவும் மனம் வரல்ல ஏன்ட மாட மாளிகையில் இல்லாத அன்பு அவனிடம் கிடைத்தது. பெரேன்ஸ் எனக்கு செலவளித்தாலும் என்னுடன் மனவிட்டு கதைக்க இடம் கொடுப்பதில்லை. பணம் மட்டுமல்ல மனம் விட்டு பேசுதலும் அன்புதான் என்பதை அவர்கள் உணரவில்லை. இதுதான் அவன் கேட்டதற்கு பதிலளித்தேன்” என்றாள்

அவள் பெற்றோர் வெட்கித் தலை குனிந்தனர். தம் கட்டுப்பாடுகளற்ற நிலையும், அலட்சிய போக்கும் ஒரு கொலைக்கு துணை போனதை அப்போதே உணர்ந்தனர். தம் செல்வமும், சுகபோக வாழ்க்கையும் ஒரு வைத்திய கனவை சுமந்த மாணவியில் எம் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெற்றோர்-பிள்ளை தொடர்பாடல், நட்பு கலந்த உறவு, பாசம் என்பன திவ்யாவுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்பதை நினைத்து அவளது பெற்றோர் மனம் குறு குறுத்தது.

ஊரின் இயற்கை எழில் வனப்பிலே கம்பீரமான தோற்றத்துடன் வீற்றிருப்பது திவ்யா வீடு மாத்திரமே. தனிக்குழந்தை, செல்வச் செழிப்பு, மாடமாளிகை இத்தனைக்கும் சொந்தக்காரி அவள் தான். செல்வச் செழிப்பால் அவள் பெற்றோருக்கு தலைகால் புரியாவிட்டாலும் திவ்யா அனைத்திலும் கெட்டிக்காரி.

சாதரணதரப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்து நகரிலுள்ள பிரபல கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்ந்தாள். அழகிய தோற்றம், ஆளுமை, அனைவருடனும் சரளமாகப் பழகும் தன்மையினால் சகமாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டாள்.

வைத்தியராகும் இலட்சியக் கனாவுடன் கால்வைத்த அவளின் கல்லூரியானது அவள் மாளிகையின் பல கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள நகரொன்றிலேயே அமைந்திருந்தது. இதனால் அவளது பெற்றோர் பிரத்தியேகமான வாகன ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களும் வியாபாரம், வெளிநாட்டுப் பயணம் என சுழன்று கொண்டிருந்ததால் இவ் ஏற்பாடு அவர்களுக்கு ஒரு சுமையாகத் தெரியவில்லை. சுலபமாகவே இருந்தது.

திவ்யாவின் பெற்றோர் அவளின் வாழ்க்கையில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் மனம் விட்டுப் பேசத்தான் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. பின்னேர வகுப்புக்கள், செல்போன் பாவனை என அவள் பொழுதும் கழிந்தது. அவளது பெற்றோரும் வியாபாரத்தில் மூழ்கி இருந்ததே தவிர அவளுடன் மனம் விட்டு பேசுமளவு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் இருந்த உறவு படிப்படியாக குறைந்து கொண்டே சென்றது.

அன்றும் திவ்யா வழமை போன்று பாடசாலை செல்ல ஆயத்தமானாள். ஆனால் வழமையாக உரிய நேரத்திற்கு வரும் ஆட்டோ சற்று தாமதிக்கவே ஆட்டோ சாரதியான தனுவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப ஆட்டோவும் வந்து சேர்ந்தது. இக்குறுஞ் செய்தியின் ஆரம்பம் அவள் வாழ்வின் மாற்றத்திற்கான அத்திவாரம் என்பதை யார் தான் அறிவர். நட்புடன் அறிமுகமான இவ்வுறவை தனுவின் நண்பனான செந்தூரன் தனக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றான்.

செந்தூரன் பார்த்தீபன் ஸேரின் முன்னாள் மாணவன். குறும்புத்தனமிக்கவன். கல்வியில் ஆர்வம் இல்லை. சக மாணவர்களையும் வழிகெடுப்பதில் வில்லன். இவனுடைய செயற்பாடுகளை அவதானித்த பார்த்தீபன் ஸேர் பல தடவைகள் தண்டித்தும் அவனில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவன் குறும்புகள் அவனை பாடசாலையிலிருந்தும் நீக்குவதற்கு காரணமாக அமைந்தன. அத் தருணத்திலிருந்து அவனுக்கு பார்த்தீபன் ஸேர் மேல் விரோதம் குடிகொண்டது. அவரை அச்சுறுத்த பல தடவைகள் முயன்றும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் திவ்யாவுடனான தொடர்பை பயன்படுத்தி பார்த்தீபன் ஸேரை பழிதீர்க்க முனைந்தான்.

இத் தருணத்தை பயன்படுத்தி தனுவின் தொலைபேசி இலக்கத்திலிருந்து திவ்யாவின் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்திகளை அனுப்ப நாடினான். திவ்யா எதிர் பார்க்காத விதம் அடிக்கடி குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன. முதலில் “அழகாக இருக்கீங்க” என்று ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல பலவாறான வர்ணிப்புக்களுடன் குறுஞ்செய்திகளும் தொடர்ந்தன.

இக்குறுஞ் செய்திகளை அனுப்பியவன் செந்தூரன் என்பதை திவ்யா அறிந்திருக்கவில்லை. திவ்யா ஆரம்பத்தில் குறுஞ் செய்திகளை மறுத்தாலும் தனுவுடனான நம்பிக்கையில் அது நட்பாக மாறியது. அவளுக்கும் இத்தொடர்பு சந்தர்ப்பமாக அமைந்தது. பெற்றோரிடமிருந்து கிடைக்காத அன்பு தனுவிடமிருந்து கிடைப்பதாக உணர்ந்தாள். நட்பாக இருந்த தொடர்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.

திவ்யாவின் கல்வியில் அவள் பெற்றோரை விடவும் பார்த்தீபன் ஸேர் அதிக கரிசனை காட்டினார். அவளுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவைப் பெற்றுக் கொள்வாள். வித்தியாசமான கேள்விகள் கேட்கும் அவள் திறன் பார்த்தீபன் ஸேரை மிகவும் கவர்ந்திருந்தது. இதனால் அவரும் அவளின் கல்விக்கு பலவாறான முறைகளில் உதவிகளைச் செய்து வந்தார்.

செந்தூரன் பார்த்தீபன் ஸேர் மேல் கொண்டிருந்த குரோதத்தை தீர்க்க இது தான் தக்க தருணம் என திட்டம் தீட்டி திவ்யாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அவளுக்கு அன்று கிடைத்த குறுஞ்செய்தி சற்று வித்தியாமாகவே இருந்தது.

“நீ உண்மையில் என்னை காதலிக்கிறாய் என்பதை நான் நம்பனுமாக இருந்தால் நீ இந்த உதவிய செய்யணும். பார்த்தீபன் ஸேரின் தொலைபேசி இலக்கம், அவர் ஸ்கூலுக்கு வருற கார்ட நம்பர், நிறம், டை(t)ம் எல்லாம் எனக்கு அனுப்பணும்.”

என்று அக்குறுஞ்செய்தி இருந்தது. அவன் கேட்பதன் பாரதூரத்தை திவ்யா அறிந்திருக்கவில்லை. எதையும் பொருட்படுத்தவுமில்லை. அவள் மனம் பெற்றோரிடம் கலந்தாலோசிக்க இடம் கொடுக்கவுமில்லை. இருப்பினும் தன் மாளிகையில் கிடைக்காத பாசம் அவனிடமிருந்து கிடைப்பதை உணர்ந்த திவ்யா அவன் சொன்னதற்கு உடன்பட்டு அவன் கேட்ட தகவல்களை குறுஞ் செய்தியாக அனுப்பினாள்.

அக்குறுஞ்செய்தியின் அடிப்படையில் குறித்த வீதியின் ஆள்நடமாற்றம் இல்லாத பகுதியில் செந்தூரன் 6:30 முதல் காத்திருந்து 6:50 இற்கு பார்த்தீபன் ஸேரை கொலை செய்தான்.

விசாரணைகளின் முடிவில் செந்தூரன் கொலையாளி என சிறையில் அடைக்கப்பட்டான். ஊரார் கதைகள் திவ்யாவின் குற்றத்தோடு அவள் பெற்றோரை சென்றடைந்தாலும் அவள் மீதுள்ள பாசத்தால் அவர்கள் எதனையும் கண்டுகொள்ளவில்லை.

(யாவும் கற்பனை)
Asma Masahim
SEUSL
Panadura

அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை…

அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை…

14 thoughts on “திவ்யா கொலையாளியா?

  1. Woah! I’m really loving the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between superb usability and visual appearance. I must say you have done a very good job with this. Additionally, the blog loads very fast for me on Safari. Outstanding Blog!

  2. always i used to read smaller articles which also clear their motive, and that is also happening with this piece of writing which I am reading here.

  3. Hi, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam responses? If so how do you stop it, any plugin or anything you can suggest? I get so much lately it’s driving me insane so any assistance is very much appreciated.

  4. Hi, i think that i saw you visited my web site so i came to return the favor.I am trying to find things to improve my site!I suppose its ok to use some of your ideas!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *