எப்போது பார்ப்போம்

  • 16

தங்க வண்ண லட்டு! – நான்
அதை தின்ன வரும் மொட்டு!
அழகான அல்வா! – என்
வீட்டு வாசல் தேடிவா!
நா இனிக்கும் தேன்முறுக்கே!
நானும் அடிமை உனக்கே!

உம்மை காணாமல் வாடுகிறேன்
அதற்கு பல கதை சாடுகிறேன்
இனிப்பகம் உம் வீடு – அதில்
நித்தம் என்னைத் தேடு
என் வயிறு அழைக்குது – உம்மை
வந்து உறங்கக் கூறி

என் கையில் பதம் சிக்கவில்லை
ஊரடங்கும் முடிந்த பாடில்லை
என் உமிழ் நீர் அழுகிறது – உம்மை
திரும்ப எப்போது பார்ப்ப்பேன்
நீ இன்றி நானில்லை அன்பே
திரும்ப எப்போது பார்ப்போமோ!

“யூடியூப்” இல் உன்னைத் தேடி
கண்ணாலே சுவைத்து ரசித்தேன்
நானே செய்து பார்க்க நாடி
சட்டி முட்டி கருகிட வைத்தேன்
விழி வழியே சுவைத்தல் போதுமா?
வழி நெடுங்கே வரமுடியுமா?
திரும்ப எப்போது பார்ப்போம்

Rafeeul

தங்க வண்ண லட்டு! – நான் அதை தின்ன வரும் மொட்டு! அழகான அல்வா! – என் வீட்டு வாசல் தேடிவா! நா இனிக்கும் தேன்முறுக்கே! நானும் அடிமை உனக்கே! உம்மை காணாமல் வாடுகிறேன்…

தங்க வண்ண லட்டு! – நான் அதை தின்ன வரும் மொட்டு! அழகான அல்வா! – என் வீட்டு வாசல் தேடிவா! நா இனிக்கும் தேன்முறுக்கே! நானும் அடிமை உனக்கே! உம்மை காணாமல் வாடுகிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *