முகமன் எனும் ஸலாம்

தெரிந்தோர் தெரியாதவர் என
எல்லோரையும் பிணைத்திடும்
கயிறு ஸலாம்

வீட்டில் பாடசாலையில்
வேலைதளத்தில்
கடைத்தெருவில் என்று
எங்கும் பரந்து காணப்படும்
வார்த்தை ஸலாம்

பெற்றோரிடம் நண்பரிடம்
ஆசிரியரிடம் உறவினரிடம்
சிரேஷ்ட மாணவரிடம்
கூறும் வாசகம் ஸலாம்

தொலைபேசி அழைப்பின்
முதல் வந்தனம் ஸலாம்
மேடையில் முதல்
ஒலிப்பதிவு ஸலாம்
சண்டையின் போதுள்ள
சமாதானம் ஸலாம்

கற்பாறைக்குள் ஊருவிச்
செல்லும் பசுமையான
வேரைப் போல
மனதிற்குள் உள்ள
குரோத மனப்பான்மையை
அழித்து அன்பையும்
நேசத்தையும்
விதைக்கக் கூடியது ஸலாம்

இறை நேச சொந்தங்களுக்கு
என் அன்பின் இனிய ஸலாம்
السلام عليكم ورحمة الله وبركاته

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.