நினைத்தவை நடக்காது நீங்கிடும் வேலை
ஆதரவாய் வந்து ஆறுதல் தருவதும்
அன்பான உன் நினைவுகளே!
தினம் உன் அன்பும் இன்று கனவுகளே!

மாற்றம் கண்ட உன் அன்பினை தேடி
உனை சுமந்த மனதோடு
காதல் பெருங்கடலில்
கரை சேர இயலாமல் தவிக்கிறேன்

தேவைகள் தேடி நாடும் அன்போ
அரை நொடி நிலைக்கா பாதகம் என்பேன்
எதும் எதிர் பாரா அன்பாய்
என் வாழ்வில் வந்த அமுதும் நீ

பிரிவின் துயரம் எம்மைத் தொட்டு செல்ல
காதல் கணவா வேலை பழுவா
உன்னை காணாமல் துடிக்கும் மனது
தினம் உன் பெயர் சொல்லி துடிக்குது

மனதால் சேர்ந்த ஆத்மா
இடைவெளி தூரம் இருந்தும்
உன்னை விடாமல் துரத்தும்
அன்புச் சண்டைகள் பிடிக்கும்

பிறக்க முன்னே தாயின் பாச வலையில்
தாயின் பின்னே தந்தை அன்பு உறையில்
கணவனாய் உந்தன் அன்பு ஒரு சேர
அன்பை உணர்ந்தேன் முழுமையாக

ஒரு நொடி நீ என்னை விட்டு நீங்க
தனிமையின் கொடுமை வாட்டுதே
தவிக்க வைக்கும் தனிமையில் வீழ்த்தாதே!
ஒரு நொடியும் எனை நீங்காதே

வரித் துளிர்களின் சொந்தக்காரி
Rafeeul
ANURADHAPURA

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help