முயற்சி செய்

  • 9

இன்று பலர் என்னால் முடியாது ,எனக்கு கஷ்டம் ,எனக்குத் தெரியாது என்று தம் வாழ்வில் முயற்சி செய்யாமலே தம்மை தாழ்த்திக் கொண்டு பின் வாங்குகின்றனர்.

ஏன் உன்னால் முடியாது ?,உன்னால் சிறு வயதில் தவழ்ந்து எழுந்து நடக்க முடியும் என்றால் ஏன் இப்பொழுது வளர்ந்த பிறகு உன்னால் முடியாது ?

மற்றவர்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்றா? மற்றவர்கள் உன்னை பார்த்து கேலி செய்வார்கள் என்றா?

ஆம்,இன்று பலரின் பிரச்சினை அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்பது தான் .அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று இருந்தால் உன் நிலமை என்ன?

அன்பர்களே மற்றவர்கள் சொல்வதை ,சிரிப்பதை உதறித்தள்ளுங்கள்.உன் முயற்சி உனக்கு .உன் செயல் உனக்கு .உன் வெற்றி உனக்கு .

அன்பர்களே இன்று நிறைய மாணவர்கள் கணிதம்,ஆங்கிலம் போன்ற பாடங்களில் பின்னடைந்து வருகின்றனர்.அதே போன்று தன்னால் முடியாது என்றும் பலரின் உள்ளங்களில் ஒர் எண்ணம்.

அன்பர்களே! உங்களால் முடியாதா அதிகமாக பயிற்சி செய்யுங்கள் உங்களால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.

ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் சொல்லுங்கள் உங்களால் முடியும் என்று . மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

அன்பர்களே சிறு வயதிலிருந்து உங்களை சார்ந்தோரை நம்பிக்கை ஊட்ட பழகுங்கள்.ஏன் எனில் நம்பிக்கை மனித மனதில் தடம் பதித்தால் நிச்சயமாக அனேக வெற்றி மான்களை உருவாக்கலாம் .

வெற்றி நடை போடும் சமுதாயத்தை உருவாக்க நம்பிக்கை எனும் விதையை விதை விதக்க இன்றிலிருந்து செயற்படுவோம்.

Fathima Aysha Saffar.

SEUSL

Southern

இன்று பலர் என்னால் முடியாது ,எனக்கு கஷ்டம் ,எனக்குத் தெரியாது என்று தம் வாழ்வில் முயற்சி செய்யாமலே தம்மை தாழ்த்திக் கொண்டு பின் வாங்குகின்றனர். ஏன் உன்னால் முடியாது ?,உன்னால் சிறு வயதில் தவழ்ந்து…

இன்று பலர் என்னால் முடியாது ,எனக்கு கஷ்டம் ,எனக்குத் தெரியாது என்று தம் வாழ்வில் முயற்சி செய்யாமலே தம்மை தாழ்த்திக் கொண்டு பின் வாங்குகின்றனர். ஏன் உன்னால் முடியாது ?,உன்னால் சிறு வயதில் தவழ்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *