நிகழ்நிலை அரங்கில் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா

  • 107

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமகால பிரச்சினைகளை வைத்து எழுதிய நூலாசிரியரின் கட்டுரைத் தொகுப்பான ‘யதார்த்த வாழ்வினிலே’ மற்றும் தச கவிதாயினிகளின் கவித் தொகுப்புக்கள் அடங்கிய ‘நிஷப்த கானங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (2021/1/30) நிகழ்நிலை இனூடாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாzஹிர் கலந்து சிறப்பித்தார்.

மேலும் அதிதியாக எழுத்தாளர், வளரி குழுமத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர், கவிதாயினி திருமதி. கம்ஸிகா கமலேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் நூல் நயவுரையினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி நிகழ்த்தினார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு நிஷப்த கானங்களின் கதாநாயகிகளாக தசகவிதாயினிகள் மிளிர்கின்றார்கள்.

எழுத்தாளர் மற்றும் கவிஞர்களான ஏ.எல். பாத்திமா ஸன்பfரா (அக்கரைப்பற்று) , ஷீபாf இப்றாஹீம் (மருதமுனை), கே. பாத்திமா றிஸாமா (நிந்தாவூர்), ஏ.எம். ஸீzனதுல் நிப்fரா (திகனை), ஸிரோசி அஸானா அக்பர் (அநுராதபுரம்), எச்.எப். பாbதுஷா (தெஹியங்க), ஏ.எப். நுஷ்ரா (அக்குரணை), மொஹமட் அனீஸ் பாத்திமா இல்மா (வெலிகம), ஜபீfர் நூருல் ஷிபாf (யாழ்ப்பாணம்), எம்.ஆர்.எப். ரிப்fதா (தர்கா நகர்) ஆகியோர்கள் விளங்குகின்றார்கள்.

கல்வி, கலை, இலக்கியம், ஆய்வு போன்ற அனைத்து விடயங்களிலும் ஒருமித்து பல்துறைகளிலும் மிளிர சமகால சவால்கள் தடையல்ல என்பதற்கு இந்நூல் வெளியீட்டு விழா சிறந்த சான்றாகும்.

நாட்டில் கொரோனா பரவலல் நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், கவிதாயினிகள் மற்றும் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் பங்கேற்புடன்  நிகழ்நிலையில் ஸூம் தொழில்நுட்பம் மூலம் இடம் பெற்ற இந் நூல் வெளியீட்டு விழா வியூகம் வெளியீட்டு மன்றத்தின் முதலாவது நூல் வெளியீட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *