தாயன்புக்கு ஒரு ஆலயம்
தாலாட்டி தாய்க்கு ஒரு தினம்
தளராமல் வழங்கும் இத்தினம்
தரணியிலே மறவோம் இத்தினத்தை
பாசம் பிறப்பது தாயின் கருவறையிலே
ஆனால் பத்து நிமிடத்தில்
பாசம் மறைந்து விடுவது என்ன தரணியிலே
தாயென்பவள் தனது சேவைகளை
ஆற்றிடுவாள் பல வகைகளிலே
பெறுமைக்குரிய தாயை
சிறுமைப்படுத்தி தலைமறைவாக்கி
வாழ வகுப்பது என்ன முறையிலே
குற்றம் செய்தோரை
மன்னிக்க முடியாது நீதிமன்றத்திலே
குற்றம் செய்தோரையும்
மன்னித்திடுவாள் தாயவளே
தான் பெற்ற பிள்ளை கையிலே
தன் கஷ்டத்தை குழி தோண்டிப்
புதைப்பாள் மனதினிலே!
தாயைப் போலே உலகிலே
போற்ற வேண்டியவை
எதுவும் இனி இல்லை
இந்த மண்ணிலே!
தத்தெடுத்து வளர்ப்போரான
முதியோர் இல்லங்கள் சிலராலே!
இந்த மண்ணில் தாயன்பு
மறைந்து போனது அதனாலே!
பெற்ற பிள்ளை தனது தாயை
தற்போது காண்பதில்லை கண்களாலே!
முதியோர் இல்லங்கள் இந்த விடயத்தில்
சேவையாற்றுவது அதனாலே!
தாயென்பவள் பார்ப்பதால்
என்னதான் குறைந்து போனது
உங்கள் பணத்திலே!
வருடத்திற்கு ஒரு நாள்
பெற்றவளை பார்ப்பதிலே!
உங்கள் மனதுக்கு இன்பம்
பொங்குது தாயின் துன்பத்திலே!
உலகில் வாழும் கோடானகோடி மக்களிலே!
தாயைப் பராமரிக்காது எவனும்
இலேசாக வாழ முடியாது சுவனத்திலே!
அன்பாலே அனைத்திடும்
அன்னையின் மனதிலே
இலகுவாய் இடத்தைப் பிடித்துவிடு
வாழும் காலத்திலே!
தாய்மையின் உயர்ந்த எண்ணத்திலே!
அன்னையை வாழவைத்திடு.
நீ உன் அன்பால்
இறுகப் பின்னிய ஆலயத்திலே!