நானும் நடைபோடுகிறேன்

  • 17

விடை தெரியா வினாக்களுடன்
விதியின் வழியை எண்ணி
விளையாட்டுப் பிள்ளை போல்
வீரமாய் நடை போடுகிறேன்

இறந்த கால இன்னல்களை
இம் மண்ணோடு புதைத்து விட்டு
இயற்கையாய் புன்னகையை
இ(எ)ன்னோடு அணிந்து விட்டு
இறைவனின் நாட்டம் எண்ணி
இறை நன்றியோடு நடைபோடுகிறேன்

எதிர்வரும் காலங்கள்
என் கண்களுக்கு விருந்தளிக்க
எனக்கிருக்கும் காலத்தை
என் எண்ணம் போல் காய் நகர்த்தி
என் எதிர் கால கனவுகளை
எனக்கேற்றாற் போல் மாற்றிடவே

நல் மதி கொண்டு நானும்
நடைபோடுகிறேன்

நடந்து முடிந்த நினைவுகளை
நந்நூல் போல் நினைவில் கொண்டு
நடக்க இருக்கும் நிகழ்வுகளை
நன்றியோடு ஏற்பதற்கு நடைபோடுகிறேன் நல் வரமாய் ஏற்றுக் கொண்டு

விடை தெரியா பக்கங்களை
விடைகளினால் நிரப்புவதற்காய்
விதியின் வழி தேடி
விரைகின்றேன் வரும்
விமர்சனத்தை பாராது

ShimA Harees
Puttalam Karambe

விடை தெரியா வினாக்களுடன் விதியின் வழியை எண்ணி விளையாட்டுப் பிள்ளை போல் வீரமாய் நடை போடுகிறேன் இறந்த கால இன்னல்களை இம் மண்ணோடு புதைத்து விட்டு இயற்கையாய் புன்னகையை இ(எ)ன்னோடு அணிந்து விட்டு இறைவனின்…

விடை தெரியா வினாக்களுடன் விதியின் வழியை எண்ணி விளையாட்டுப் பிள்ளை போல் வீரமாய் நடை போடுகிறேன் இறந்த கால இன்னல்களை இம் மண்ணோடு புதைத்து விட்டு இயற்கையாய் புன்னகையை இ(எ)ன்னோடு அணிந்து விட்டு இறைவனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *