எதுக்கும் நீ தளர்ந்துடாத

அவளோடு சில நொடிகள்
தொடர் -11

எத்தனைக்கு எத்தனை தடவைகள் விசாரித்தும் விதியைப் பார்த்தாயா அதன் விளையாட்டை ஆரம்பித்து விட்டது. என்று அவளது உல்லுணர்வு பேசிக் கொண்டிருக்க அவள் பெயர் கூறி ஒரு குரல் அவளை அழைத்தவாறு கதவருகே நின்றிருந்தது.

அவசரமாக எழுந்து சென்று கதவினைத் திறந்து விட்டாள்.

“என்னமா இன்னும் உடுப்பு மாத்தலயா இவளவு நேரமா? சரி நீ போய் உடுப்ப மாத்திகிட்டு கீழுக்கு வாமா. கியாஸ்ட மாமியாக்கல் வாரண்டு சொல்லிருக்காங்க”

“ஆ சரி மாமி”

“என்ன மகள் ஒரு மாதியா இருக்குற.”

“ஒ  ஒன்டுமில்ல மாமி.”

“நான் ஒராள். குடும்பத்தையே விட்டுட்டு வந்திருக்கிங்க கவல இல்லாம இருக்குமா? நான் வேற கேட்டுக்கிட்டு”

மௌனம் காத்தாள் பசியா அழுகை வந்து விடும் போல் இருந்தது அவளுக்கு ஆனாலும் சமாளித்துக் கொண்டாள். என்ன தான் அவர் ஆறுதலாக நான்கு வார்த்தை பேசினாலும் இவளுக்குள் இருக்கும் தவிப்பை தணித்து விடவா போகிறது.

மாமி போனதும் கதவைச் சாத்திக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். பெரும் பாறையை விழுங்கிக் கொண்டது போல் இருந்தது அவளுக்கு. அழுதவள் ஒரு கனம் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நிதானமாகி கண்ணீரைத் துடைத்துவிட்டாள்
நிதானமாகச் சிந்தித்தாள். நிம்மதி கொள்ள முடியவில்லை அவளால்.

எல்லாவற்றையும் யாரிடமாவது சொல்லி அழனும் போல் இருந்த போது அவளுக்கு சனா தான் ஞாபத்திற்கு வந்தாள். உடனே சனாவுக்கு அழைப்பு விடுத்தாள். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் அவளிடம்இருந்து பதில் கிடைத்தது.

“சோரி பசி என்னால கல்யாணத்துக்கு வந்துக்க ஏழாம பெய்த்துடா. உனக்குத் தான் தெரியுமே”

“இப்ப உம்மாக்கு எப்புடி இருக்கு”

“உம்மாட நிலம கடும் மோசமா இருக்கு பசி. உம்மா நாளுக்கு நாள் இன்னும் வீக்காவிகிட்டே போறாங்க. எனக்கு பயமா இருக்கு பசி.”

“பயப்புடாத உம்மாக்கு நல்லாவிடும். அல்லாஹ் குணப்படுத்தி விட்டுடுவான். சொல்லயா வேணும் உம்மாவ நல்லா பாத்துக்க. நான் ஒரு நாளைக்கு வரக் கிடச்சா வாரன். எதுக்கும் நீ தளர்ந்துடாத”

ஆறுதல் தேவைப்பட்டவள் தற்போதைக்கு சனாவுக்கு ஆறுதலுக்குத் தேவைப் பட்டிருந்தாள். ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவளை தன்னுடைய நிலமைகளைச் சொல்லி மேலும் யோசிக்க வைக்காமல் சொல்ல வந்த விடயத்தை மறைத்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். என்ன செய்ய எல்லாம் இறைவனின் லீலை என்று மனம் தேறினாள்.

மறு பக்கத்தில் கியாஸ் அத்தனை காலமும் தான் கொண்டாடித் தீர்த்த அறையை அணுக முடியாமல் திண்டாடினான்.

தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாததே தனக்கு நிர்ப்பந்தமாகி விட்டதே என எண்ணிக் கொண்டு அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தான். பசியாவும் தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளிவரத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

கியாஸைப் பார்க்கப் பார்க்க அவனுடைய முகத்தில் அவளைத் தொட்ட வெறுப்புத்தான் தென்பட்டுக் கொண்டே இருந்தது.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி
Author: admin