அந்த மழை நாள்

  • 99

கதிரவன் காணாமல் போக
கருமேகங்கள் படை சூழ
மின்னல் கீற்றுடன்
இடியின் மேளதாளத்துடன்
தரணியை நோக்கி
கார்மேகம் பொழிந்த
மழை நாளொன்றில்.

சிறார்களின்
காகிதக்கப்பல்கள்
காற்றில் ஆட
மழை நீர்
மண்ணில் ஓட
வெட்டவெளியில்
தொப்பலாக நின்றன
மரங்களும் மாடிகளும்.

மாடி வீட்டு
பணக்காரர்கள்
பல்கனியிலே
கையில் தேநீர்
கோப்பையோடு
மெல்லிசை பின்னணியில்
மழையை இரசிக்க.

குடிசை வீட்டு
ஏழைகள்
வீட்டுக்குள் வந்த
நீர் வடியாதா
என மழையை
ஏக்கத்துடன் பார்க்க.

வியர்வை சிந்தி
ஏர்பூட்டி உழுத
விவசாயிகள்
புன்னகையுடன்
விண்னை நோக்க.

மழைச்சாரல்
மேனியோடு சேர்ந்த
உற்சாக துள்ளலோடு
ஒரு கூட்டம்
மழையில் நனைய.

அடைமழையோ
அளவு கோலின்றி
சோவென பெய்தது
பக்கமெல்லாம்.

பாதையோரம் செல்லும்
பயணிகள்
பக்கத்தில் ஒதுங்க
வாகனங்கள்
மெல்லமாக செல்ல
மழையை வெறித்து
பார்த்த பலர்
இரசித்து
பார்த்த சிலர்
மத்தியில்
தரணியை தன்
பக்கம் சாய்த்தது
அந்த மழை நாள்!

Rushdha Faris
Sound Eastern
University of Sri Lanka.

கதிரவன் காணாமல் போக கருமேகங்கள் படை சூழ மின்னல் கீற்றுடன் இடியின் மேளதாளத்துடன் தரணியை நோக்கி கார்மேகம் பொழிந்த மழை நாளொன்றில். சிறார்களின் காகிதக்கப்பல்கள் காற்றில் ஆட மழை நீர் மண்ணில் ஓட வெட்டவெளியில்…

கதிரவன் காணாமல் போக கருமேகங்கள் படை சூழ மின்னல் கீற்றுடன் இடியின் மேளதாளத்துடன் தரணியை நோக்கி கார்மேகம் பொழிந்த மழை நாளொன்றில். சிறார்களின் காகிதக்கப்பல்கள் காற்றில் ஆட மழை நீர் மண்ணில் ஓட வெட்டவெளியில்…

4 thoughts on “அந்த மழை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *