இந்து சமுத்திரமுத்தும், இலங்கை வாழ் மக்களின் பண்புகளும்

  • 30

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ்க்கரைக்கு அப்பால், இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களைக் கொண்ட தீவு ஆகும்.

இலங்கை பல்வகைமைக் கலாசாரத்துடன் காணப்படுவதானது சிறப்பம்சம் ஆகும். பல்லின மக்களும் தத்தமது கலாசாரங்களைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது இலங்கைத் திருநாட்டின் புகழை எட்டுத்திக்கும் எட்டச்செய்திருக்கின்றது.

“புன்னகைக்கும் மக்களின் தேசம்” எனவும் அழைக்கப்படும் இலங்கையானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கக் காரணம் எழில் கொஞ்சும் இயற்கையின் அழகு மட்டுமன்றி, இலங்கை மக்களின் சிறந்த விருந்தோம்பல் பண்பும்தான் என்றால் அது மிகையில்லை.

இந்து சமுத்திரத்தின் முத்தாகிய இலங்கையிலே வாழும் மக்கள் தங்களுக்கிடையில் உறுதியான, ஆரோக்கியமான குடும்ப, சமூகத் தொடர்புகளையும் பேணி வருகின்றனர் என்பது வெள்ளிடை மலையாகும். அத்துடன் புரிந்துணர்வும் பரந்த மனப்பாண்மையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவை சிறந்ததொரு சமூகச் சூழலுக்கு வழி கோலுகின்றன.

இனங்களுக்கிடையே காணப்படும் நல்லுறவு மற்றும் நல்லிணக்கம் என்பன வருடந்தோறும் இடம்பெறும் மதப் பண்டிகைகள் விழாக்களின் போது புதுப்பிக்கப் பட்டு வலுவடைகின்றது என்பதும் இங்கு குறிப்பிடப் பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

Yousuf Misban.
Gr 11
Al Hasaniya m.v
Maggona.

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ்க்கரைக்கு அப்பால், இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களைக் கொண்ட தீவு ஆகும். இலங்கை பல்வகைமைக் கலாசாரத்துடன் காணப்படுவதானது சிறப்பம்சம் ஆகும். பல்லின மக்களும் தத்தமது கலாசாரங்களைப் பேணி…

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ்க்கரைக்கு அப்பால், இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களைக் கொண்ட தீவு ஆகும். இலங்கை பல்வகைமைக் கலாசாரத்துடன் காணப்படுவதானது சிறப்பம்சம் ஆகும். பல்லின மக்களும் தத்தமது கலாசாரங்களைப் பேணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *