விடுதியில் ஓர் பொழுது

  • 11

“இன்டக்கி friday” கல்லூரி நாட்களில் காதுகளில் ஒலிக்கும் மிகவும் இன்பமான செய்தி இதுவாகத் தான் இருக்கும். அனைவரின் வதனமும் ஓர் பிரகாசம், மலர்ச்சி, சந்தோஷம் என வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் அந் நாளில்.

ஹாதியா வாழ்வில் இரண்டு வாரத்திற்கொருமுறை வீட்டுடன் கதைக்கும் அப்பொழுது எண்ணிலடங்கா உணர்வுகளை கொண்டது என்பதை அதை அனுபவித்த ஒவ்வொரு நெஞ்சும் நிச்சயம் உணரும். அப் பொழுதின் உணர்வுகளை பேனா மையில் வரைந்து தீர்த்திட முடியாதவை.

“Calling day” என பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எம் சந்தோஷத்தை பறிமாறியே அப் பொழுது எம்மை வந்தடைந்துவிடும். Calling week ஆரம்பமானவுடனே எம் calling date க்காய் நாளென்னியே எம் காலத்தை கடத்துவோம். வெள்ளிக்கிழமை அனைத்து வேலைகளையும் அவசரமாய் செய்து எம் calling காய் காத்திருப்போம். அச் சுவை? அதை அனுபவிக்காத ஒவ்வொருவரும் நஷ்டவாளிகள் தான்.

அக் காத்திருப்பில் சந்தோஷம், கவலை, பயம் என பல்வேறு உணர்வுகளை எம் சின்ன இதயம் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கும். வீட்டுடன் பேசப் போகிறோம் என்ற சந்தோஷம், வீட்டின் நிலைமை எவ்வாரோ என்ற பயம், இன்று எனக்கு அழைப்பு வராதோ என்ற கவலை. இவ்வாறு அவ் குறுகிய பொழுதுக்குள் ஆயிரம் உணர்வலைகள்.

வீட்டுடன் கதைக்கும் அவ் ஐந்து நிமிடத்திற்காய் ஏங்கும் எம் பிஞ்சு உள்ளங்கள். அதற்காய் நாம் தயாராகும் முறைகள். வீட்டுடன் மறக்காமல் சொல்ல வேண்டிய விடயம் என தாளில் வரைந்து அதை ஒத்திகைப் பார்த்த தருணம். ஒவ்வொருவருக்காய் அழைப்பு வரும் போது அது எனக்காய் இருக்க வேண்டும் என்று ஏங்கும் பொழுதுகள். என்றும் மறக்க முடியாத நிஜங்கள் இவை. இன்று நினைவுகளாக காகிதத்துக்குள் முடங்கிக்கிடக்கிறது.

நண்பி அலைப்பேசியில் ஆவலுடன் தன் உறவுகளுடன் கதைக்கும் போது அவளை உற்ற உறவாய் நினைத்த ஓர் தோழி கடதாசித் துண்டுடன் அவளிடம் வந்து “எனக்கு இந்த நொம்பருக்கு call எடுக்க சொல்லி உங்கட வீட்டிடம் சொல்லுங்களே” என கவலையான முகத்துடன் அவளின் ஆதரவை வேண்டுவாள். நண்பிக்கு உதவாத உறவுகளா? எம் நண்பர் கூட்டம்.

அனைவருக்கும் call வரவேண்டும் என்பது தான் அனைவரினதும் அன்றைய நாளின் பிரார்தனையாய் அமையும். எல்லோருக்கும் call வந்துவிட்டதா? என அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்போம். ஒருவருக்கேனும் call வராவிட்டால் நாம் அடையும் கவலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

விடுதி வாழ்வின் ஓர் மறக்க முடியாத பக்கம் தான் தொலைப்பேசி அழைப்புக்கான எம் ஏக்கம். அவ் ஐந்து நிமிடத்திற்கான உரையாடலுக்கு இரண்டு வாரம் காத்திருப்போம். ஐந்து நிமிடத்தை பேசி முடிவதற்கு முன்னே “புள்ளே time அ பாருங்கே.” என Aunty இன் வார்த்தை அப் பொழுதின் பெரும் எதிரியின் வார்த்தையாய் உருவெடுக்கும். ஏசினாலும் பரவாயில்லை பேசியே தீருவேன் என சிலர் தம் கடமையை கட்சிதமாய் நிறைவேற்ற, இன்னும் சிலர் ஏச்சை தாங்க முடியாமல் தொலைப்பேசியை அனைத்துவிடுகின்றனர். விடுதி வாழ்வில் மறக்க முடியாத ஓர் நினைவலை இது.

ஒவ்வொரு விடுதி மாணவனுக்கும் மறக்க முடியா சில நினைவுகள் அவன் நினைவலையில் நிச்சயம் காணப்படும். என் நினைவின் சிறு துளியே என் பேனா மையின் காகிதமாய் இன்று.

இவள்
எழுத்தின் நேசகி,
Zilfa Nalim
Weligama

“இன்டக்கி friday” கல்லூரி நாட்களில் காதுகளில் ஒலிக்கும் மிகவும் இன்பமான செய்தி இதுவாகத் தான் இருக்கும். அனைவரின் வதனமும் ஓர் பிரகாசம், மலர்ச்சி, சந்தோஷம் என வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் அந்…

“இன்டக்கி friday” கல்லூரி நாட்களில் காதுகளில் ஒலிக்கும் மிகவும் இன்பமான செய்தி இதுவாகத் தான் இருக்கும். அனைவரின் வதனமும் ஓர் பிரகாசம், மலர்ச்சி, சந்தோஷம் என வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் அந்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *