பிரிந்து செல்கிறோம் நாங்கள்

  • 17

பிரியப் போகிறோம் நாங்கள்
எங்கள் பதின்மூன்று வருட
நட்பென்னும் இல்லத்தில் இருந்து

ஒரே வகுப்பறையில் கல்வி கற்றதால்
ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை!.
உயர்வு தாழ்வு ஏதுமில்லை!
யாவரும் ஒரு தாய்ப் பிள்ளையே!

ஒவ்வொரு பாட மணியோசை கேட்ட பின்பும்
ஒவ்வொரு ஆசியர்களும் வந்த பின்னே
அவர்களுடன் ஸலாம் சொல்லப் பேசியதும்
இன்னும் சில நேரங்களில்
நாங்கள் வாங்கிய சிறு ஏச்சுக்களும்!

அதிபரை காணும் போது இருக்கும் பயம்
அவர் போணவுடன் போய்விடும்
ஆனால் அவர் மீது மனதில் வைத்த மரியாதையோ
என்றைக்குமே மனதில் நிலைத்திருக்கும்!

பாடசாலை நாட்களை கட்டடிப்பதும்
மறு நாள் காலையில் லெட்டர் கொண்டு போதும்
பாடசாலை நாட்களிலே ஒரு வசந்தமே

ஆண்டு ஒன்று முதல் இன்றுவரை
கற்பித்த அனைத்து ஆசான்களுக்கும் நன்றியுடன்
இத்தினம் தொடக்கம் இத்தருணம் வரை!
இணைந்திருக்கும் நண்பர்களான சகோதரர்களுடன்

பிரிந்து செல்கிறோம் நாங்கள்!
உங்கள் நினைவுகளை வாங்கிக் கொண்டு!
எங்கள் நினைவுகளை
உங்கள் மனதில் பதித்துவிட்டு!

பாடசாலை பிரியாவிடைக் கவிதை
பாத்திமா பாதுஷா ஹுஸைன்தீன்

பிரியப் போகிறோம் நாங்கள் எங்கள் பதின்மூன்று வருட நட்பென்னும் இல்லத்தில் இருந்து ஒரே வகுப்பறையில் கல்வி கற்றதால் ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை!. உயர்வு தாழ்வு ஏதுமில்லை! யாவரும் ஒரு தாய்ப் பிள்ளையே! ஒவ்வொரு பாட…

பிரியப் போகிறோம் நாங்கள் எங்கள் பதின்மூன்று வருட நட்பென்னும் இல்லத்தில் இருந்து ஒரே வகுப்பறையில் கல்வி கற்றதால் ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை!. உயர்வு தாழ்வு ஏதுமில்லை! யாவரும் ஒரு தாய்ப் பிள்ளையே! ஒவ்வொரு பாட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *