என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?

  • 65

அவளோடு சில நொடிகள்
தொடர் -12

புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின.

விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும் எதையும் ஏற்க மனமில்லாமல் கடந்த கசப்பான நினைவுகளுக்குள் சிக்கித் தவிக்கும் கியாஸும் கணவன் மனைவி என்ற உறவில் இணையாமல் வெறுமனே ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

காலச்சக்கரம் வேகமாய் நகரக் கூடியது. அன்று வீட்டில் யாரும் இல்லாத தனிமை நஸீஹாவோடு நீண்ட நேரம் பேசக் கிடைத்தது பசியாவிற்கு, மெது மெதுவாக கதையை விட்டாள் பசியா.

“நஸீஹா ஒன்னு கேக்கனும்” தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள்.

“ஆ கேளுங்களன்”

“நீ நான் கேக்குறதுக்கு எதையும் மறைக்காம உண்மய சொல்லுவியா”

“ஆ கேளுக்களன் பாப்பம்”

“அன்னைக்கு உங்க நானா லவ் பண்ணிருக்காங்கன்னு சொன்னிங்க. அதுக்கு பிறகு என்ன நடந்திச்சின்னு எதுவுமே சொல்லலயே இப்ப சொல்லுவியா?”

“அத நீங்க இன்னும் கியாஸுக்கிட்ட கேக்கலயா?”

“இல்ல நான் அவருகிட்ட கேக்கல. எனக்கு தெரியாத மாதியே இருக்கட்டும்.”

“ஓகேய் நானே சொல்றன். நீங்க அவனுக்கிட்ட கேக்க மாட்டிங்களே?”

“இல்ல.”

“கியாஸ் அப்ப பேராதனிய யுனிவசிட்டில பைனலியர் படிச்சிட்டு இருந்தான். அப்பதான் அவன்ட வாழ்க்கைல சனா அறிமுகமாவினா. சனாவும் நானும் ஒரே பெச்ல தான் இருந்தம். எல்லாரையும் விட சனா எனக்கு நெருக்கமானவளா இருந்தா. ஒரு வேள கியாஸ்ட லைப்ல அவ வாரதுக்கு நான் கூட காரணமா இருக்கலாம். ஆரம்பத்துல ஒருத்ர ஒருத்தர் பார்த்துக்காம அவங்களுக்குள்ள உருவான புரிந்துணர்வு லவ் வரைக்கும் போகும்னு நான் நினச்சிருக்கல்ல. எல்லாமே இப்பதான் நடந்து முடிஞ்ச மாதி இருக்கு.”

“அப்ப ஏன் அவங்க சேரல்ல”

“விதி உங்கள தான் கியாஸ்ட வைபாக்கி இருக்கு. எங்க உம்மாக்கு கியாஸ் லவ் பண்ணினது பிடிக்கல்ல சனாவையுயேய் அவங்களுக்கு பிடிக்கல்ல. ஆனா இவங்கட லவ் வித்தியாசமானதா இருந்திச்சி. அவங்க ஒருத்தரோட ஒருத்தர் அளவுக்கு அதிகமா பேசினது கூட இல்ல. பேரன்ஸ்ட அனுமதிக்காக காத்திருந்தாங்க பிரிஞ்சிட்டாங்க”

“அதுக்கு பிறகு அவரு சனாவ பாக்கவே இல்லயா? சனா கல்யாணம் முடிச்சிட்டாவா.”

“இல்ல சனாவ பத்தின தகவல் எதுவுமே தெரியாது. அவ எங்க இருக்கான்னு கூட தெரியாது.”

‘இத்தன வருசமா சனாவ மறக்காதவரு. மறுபடியும் என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?’

பசியாவிற்குள் இன்னும் பல கேள்விகள் உதயமாகின. அவளுடைய முக பாவனை அடியோடு மாறிப் போனது. அது வரை அவளை அவதானித்துக் கொண்டிருந்த நஸீஹா சிரித்துக் கொண்டே,

“மைனி”

அவள் எதையோ கூற வர அதைத் தடுக்கும் படியாக குறுக்கிட்டது தாயின் அழைப்புச் சத்தம்

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் -12 புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின. விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும்…

அவளோடு சில நொடிகள் தொடர் -12 புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின. விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும்…

9 thoughts on “என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?

  1. Hello! I just wanted to ask if you ever have any issues with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing many months of hard work due to no data backup. Do you have any solutions to prevent hackers?

  2. I’m not sure where you’re getting your information, but great topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great info I was looking for this information for my mission.

  3. Very good website you have here but I was wanting to know if you knew of any user discussion forums that cover the same topics talked about here? I’d really like to be a part of group where I can get feed-back from other knowledgeable people that share the same interest. If you have any suggestions, please let me know. Thank you!

  4. Hello! I just would like to give a huge thumbs up for the great info you have here on this post. I will be coming back to your blog for more soon.

  5. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  6. Howdy very nice blog!! Man .. Excellent .. Superb .. I’ll bookmark your site and take the feeds also?KI’m satisfied to find a lot of useful info right here within the put up, we’d like work out extra strategies on this regard, thank you for sharing. . . . . .

  7. What is Boostaro? Boostaro revolutionizes romantic performance enhancement through its reliance on the wisdom of natural ingredients

  8. It’s perfect time to make some plans for the future and it is time to be happy. I’ve read this post and if I could I wish to suggest you few interesting things or suggestions. Perhaps you can write next articles referring to this article. I desire to read even more things about it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *