தென் கிழக்கின் மாணவியாய் நான்

  • 15

இரண்டாயிரத்து பத்தொன்பது
பெப்ரவரி பண்ணிரண்டு
நான் கால் பதித்தேன் உன்னில்!
இன்னும் அந்த இன்பமயமான நொடிகளோ
அலை மோதுகின்றன என்னில்!

கன்னி மாணவியாய் கன்னி வருடமதில்
கண்ணீருடன் நான் பயணித்த நாட்களோ
என் வாழ்வின் வசந்த காலங்கள்!
மீண்டும் தேடினாலும் அடைய முடியாத
நாட்கள் அல்லவோ அவை?

ஊர், தேசமே அறியாமல்
இணைந்த நட்புக்கள் தான் இன்று.
கல்லூரி நட்பையும் வென்ற நிலையில்
இதயத்தில் நின்று வாழ்கிறது!

ஸீனியர் என்ன செய்வாரோ?
ரேங்கிங் ஏதாச்சும் கொடுப்பாரோ என
அச்சமடைந்தே தலை குணிந்து
குடு குடுப்பாட்டி போல் ஓடிய நாட்கள்
தரும் சுவாரஸ்யங்களோ ஏராளம்!

விரிவுரையாளர்கள் யார்? எங்க ஊரு
ஸ்கூல் சேர் மார், டீச்சர்ஸ் மார் மாதிரி
இருப்பார்களோ என ஏங்கித் திரிந்து
இறுதியில் அடடா அவர்களும்
எமது நண்பர்கள் போலவே என மனதைத்
தேற்றிக் கொண்ட தருணங்களோ இனிமை

வாழ்வின் வசந்தமொன்று தென்றலாய் வீசி
உல்லாச வாழ்க்கையில் என்னைப்
பயணிக்கத் செய்த பல்கலையே
பேரறிஞர் அஷ்ரப் அள்ளிக் கொடுத்த பெரு சொத்தே

நான் உன்னில் வாழ்வைத் தொலைத்து இன்றுடன்
பெப்ரவரி பன்னிரெண்டுடன்
ஈராண்டுகள் பூர்த்தியாகிறதே

இரண்டாயிரத்து பதினேழு, பதினெட்டின்
இனிய இரண்டாவது அகவையை
வாழ்த்தி வரவேற்பதோடு
சிறிது மனமும் வருந்துகிறேன்
என் பல்கலை ஆயுள் குறைகிறதே!

இலங்கை தென்கிழக்கே உன்னிடம் மீண்டும்
கன்னியாய் மடி சாய்த்துக் கொள்ள
ஒரு வாய்ப்பு தருவாயா நீ!

இப்படிக்கு உன் விடுகை வருட மாணவி
உன் இதயத்தோழி
பாத்திமா பாதுஷா ஹுஸைன்தீன்

Fathima Badhusha Hussain Deen
2nd year
SEUSL

இரண்டாயிரத்து பத்தொன்பது பெப்ரவரி பண்ணிரண்டு நான் கால் பதித்தேன் உன்னில்! இன்னும் அந்த இன்பமயமான நொடிகளோ அலை மோதுகின்றன என்னில்! கன்னி மாணவியாய் கன்னி வருடமதில் கண்ணீருடன் நான் பயணித்த நாட்களோ என் வாழ்வின்…

இரண்டாயிரத்து பத்தொன்பது பெப்ரவரி பண்ணிரண்டு நான் கால் பதித்தேன் உன்னில்! இன்னும் அந்த இன்பமயமான நொடிகளோ அலை மோதுகின்றன என்னில்! கன்னி மாணவியாய் கன்னி வருடமதில் கண்ணீருடன் நான் பயணித்த நாட்களோ என் வாழ்வின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *