நிறத்தினால் நேசிக்காதே!

  • 14

பேதம் இல்லை- நிறத்தில்
அதை யோசி

கறு நிறத்தால் சாதனை
புரிந்தோர் பலர்
கறுமை தாழ்வல்ல

கருமேகம் கறுப்பென்று
மழையை வெறுப்பது உண்டா?
தேகம் கறுப்பென்று
வெண்மனதை வெறுப்பது முறையா?

கடைசியில் கட்டையில்
வெந்து சாம்பலான
கறுப்பை வெறுப்பது முறையா?

நிலக்கரியும் கறுப்பென்று
மின்சாரம் தேவை இல்லை
என்பது சரியா?

இருள் கூட கறுப்பு தான்
இரவு என்ற வரவைத் தருகிறது
நம் நிழல்கூட கறுப்பு தான்

கண்ணுக்கு  அழகு தரும்
மை கூட கறுப்பு தான்
நிறங்களில் கறுப்பின்றி
நிகழாது பிறப்பும் இறப்பும்

கறு நிறம் சிலருக்கு – மனதில்
மறைத்து வைக்கப்பட்ட வடு
சிலருக்கோ அன்பின் ஆலயம்

கறுப்பு இல்லாத இடம்
எப்போதும் வெளுப்புதான்
கறுப்பை நேசி
வெறுப்பைக் காட்டாதே!

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka(R)

பேதம் இல்லை- நிறத்தில் அதை யோசி கறு நிறத்தால் சாதனை புரிந்தோர் பலர் கறுமை தாழ்வல்ல கருமேகம் கறுப்பென்று மழையை வெறுப்பது உண்டா? தேகம் கறுப்பென்று வெண்மனதை வெறுப்பது முறையா? கடைசியில் கட்டையில் வெந்து…

பேதம் இல்லை- நிறத்தில் அதை யோசி கறு நிறத்தால் சாதனை புரிந்தோர் பலர் கறுமை தாழ்வல்ல கருமேகம் கறுப்பென்று மழையை வெறுப்பது உண்டா? தேகம் கறுப்பென்று வெண்மனதை வெறுப்பது முறையா? கடைசியில் கட்டையில் வெந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *