வரமாய் வருவாய் நீ

  • 12

கண்ட கனவுகள்
நிஜமாகும் நேரம்
வாழ்வின் மைல்கற்களை
அடையும் நேரம்

நீண்ட காத்திருப்புக்கு
பதில் கிடைக்கும் நேரம்
மொட்டுக்கள் இதழ் விரித்து
பூக்கும் நேரம்

புரியாப் புதிர்களுக்கு
விடை கிடைக்கும் நேரம்
குறுக்கிட்ட தடைகள்
உடைக்கப்படும் நேரம்

தொட முடியாத தூரத்தில்
இருந்த இரு இதயங்கள்
தொடக்கூடிய நெருக்கத்தில்
சந்திக்கும் நேரம்

என் கன்னிக் கனவுகளை
விண்மீனாக மின்னச் செய்து
கண் சிமிட்ட செய்ய
நீயும் வருவாய்

ஓர் உயிரில் ஈருடலாய்
ஓர் தட்டில் இரு பசியாய்
ஓர் காதலில் இரு இதயமாய்
ஓர் உரிமையில் இரு உறவாய்
நீயும் வருவாய்
எனக்கான ஒரு வாய்ப்பாக அல்ல
வரமாய் வருவாய் நீயும்!

Noor Shahidha
SEUSL
Badulla

கண்ட கனவுகள் நிஜமாகும் நேரம் வாழ்வின் மைல்கற்களை அடையும் நேரம் நீண்ட காத்திருப்புக்கு பதில் கிடைக்கும் நேரம் மொட்டுக்கள் இதழ் விரித்து பூக்கும் நேரம் புரியாப் புதிர்களுக்கு விடை கிடைக்கும் நேரம் குறுக்கிட்ட தடைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *