விடுதி

  • 11

முதல் அறிமுகத்தில்
முகமன்கள் பரிமாறி
நட்பெனும் முகவரியில்
முழந்தாளிட்டோம்

கலகலப்பாய் கதை பேசி
கைகோர்த்து நடைப்போட
நண்பர்களானோம்
பல்கலைப் பூங்காவில்

கேலியும் கிண்டலும்
குறும்பும் கூத்தும்
குடிகொண்டது
விடுதி அறைகளில்

பாத்ரூமில் காத்திருப்பு
வொஷ்ரூமில் முணுமணுப்பு
வார்டனுடன் கடுகடுப்பு

பசிக்காக உணவு
பாதி நேரம் தூக்கம்
சலித்துக்கொண்டே
விரிவுரை
விழித்துக் கொண்டே
ஒப்படைகள்
விறுவிறுப்பாய் அமையும்
வாரயிறுதி நாட்கள்

அழுத்துக் கொண்டே
ஆடை கழுவி
அன்னையின் நினைவில்
நண்பியின் மடிசாய்ந்த
தருணங்கள் பல

தந்தையின் தியாகத்தை
கையிருப்பு காலியாகையில்
கண்டு கொள்ளும்
காலங்களிது

இன்பத்தையும் துன்பத்தையும்
பொறுமையையும்
தியாகத்தையும்
இழப்பையும் ஏற்பையும்
மொத்தமாய் மொழியும்
வகுப்பறைய இது

மனித மனங்களையும்
மாறிச் செல்லும்
குணங்களையும்
அறிந்து கொள்ளும்
நாட்களிது

தனியாக எதையும்
எதிர் கொள்ளும்
தைரியத்தை
ஏற்படுத்தும்
சந்தர்ப்பங்கள்
இங்கே

வாழ்க்கைப் பாடத்தை
கண்டிப்பாய்க்
கற்றுத் தரும்
அற்புதமான ஆசான்
விடுதி!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

முதல் அறிமுகத்தில் முகமன்கள் பரிமாறி நட்பெனும் முகவரியில் முழந்தாளிட்டோம் கலகலப்பாய் கதை பேசி கைகோர்த்து நடைப்போட நண்பர்களானோம் பல்கலைப் பூங்காவில் கேலியும் கிண்டலும் குறும்பும் கூத்தும் குடிகொண்டது விடுதி அறைகளில் பாத்ரூமில் காத்திருப்பு வொஷ்ரூமில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *