மக்களை ஏமாற்றி துரோகம் செய்தவர்களை எப்படி மன்னிப்பது

  • 6

முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் தனி முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த அரசு முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் உரிமைகளை பறிப்போம் என்று கூச்சல் இட்ட நிலையிலும், முஸ்லிம் மக்களின் விருப்புக்கு எதிராக 20 வது திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் அறைந்ததை நாம் அறிவோம்.

மேலும் இந்த விடயத்தில் தலைமைகளின் ஆசீர்வாதத்துடனே வாக்களித்ததாகவும், தலைமைகள் ஏற்கனவே ஆட்சியாளர்களுடன் பேசிய படியே அனைத்தும் நடந்தேறின என கசிவுகள் வெளியாகிய நிலையில், இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை என ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதன் பிரதிபலனாக திருத்தத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்களை மன்னித்தல் என்ற ஒரு புது யுக்தி கையாளப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் அடிப்படையில் நோக்கும் போது தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் ஆதரவளித்தோம் என்ற அவர்களின் கூற்று உண்மையாகவே தெரிகிறது.

ஒட்டு மொத்த சமூகத்தையும் ஏமாற்றி துரோகம் செய்த ஒட்டு மொத்த சமூகத்தின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளானவர்களை சமூகத்தின் அனுமதியின்றி தலைமைகள் மன்னிப்பதன் பின்னணி என்ன?

இவர்களின் இவ்வாறான செயல் இஸ்லாமிய அடிப்படையில் சரியானதாக அமையுமா? எவனோ ஒருவனை கொலை செய்த குற்றத்தை சம்பந்தமே இல்லாத தலைவர் மன்னிப்பது போன்ற ஒரு செயலே ஆகும்.

வாக்கெடுப்புக்கு முந்திய இரவு எதிராக வாக்களிப்பதாகவே முடிவு செய்யப்பட்டதாகவும், தலைமையை மீறியே உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும் அப்போது தலைமைகளால் கூறப்பட்டது. ஆனால் தற்போது மக்களது தேவையையும், ஜனாஸா விடயத்தையும் முதற்கொண்டு வாக்களித்ததாகவும், அதேவேளை தலைமைகளின் ஆசீர்வாதத்துடனே வாக்களிதோம் என உறுப்பினர்கள் கூறும் நிலையில் பல்வேறுபட்ட வாக்கு மூலங்களே வெளி வருகின்றன.

தலைமைத்துவத்திற்கு மாறு செய்த பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேஷனின் கட்சியில் இருந்தவரை கட்சியில் இருந்து இடை நிறுத்தியது சமூக நம்பிக்கைக்கைக்கு காத்திரமான முன்னெடுப்பாகும்.

இவர்களுக்கு வாக்களித்ததை முஸ்லிம் மக்கள் ஏதோ ஒரு பெரும்பான்மை கட்சி ஒன்றுக்கு வாக்களித்திருந்தால் இன்று முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்.

இந்நிலையில் தலைமைகளும் சேர்ந்தே முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தார்களா?

எவ்வாறாயினும் இவர்கள் சமூகத்திற்கு செய்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இருபத்தி ஐந்து லட்சம் மக்களுக்கும் செய்த துரோகத்தை எவ்வாறு தலைமைகள் இலகுவாக மன்னிப்பார்கள்? அனைத்தும் நாடகமா?

மீண்டும் அரங்கேறும் நாடகம் முஸ்லிம் சமுகத்தை ஏமாற்ற முற்படும் முஸ்லிம் கட்சிகள். எதிர் காலத்தில் சமுதாயமே இவர்களுக்கு பதில்சொல்லும்!

பேருவளை ஹில்மி

முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் தனி முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த அரசு முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் உரிமைகளை பறிப்போம் என்று கூச்சல் இட்ட நிலையிலும்,…

முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் தனி முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த அரசு முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் உரிமைகளை பறிப்போம் என்று கூச்சல் இட்ட நிலையிலும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *