வாழக்கை ஒரு வட்டம் மஹிந்தவும் மனோவும்

  • 11

1990 வருடத்தில், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளைஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவிடம், முறையீடு செய்ய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்பி மஹிந்த ராஜபக்ச ஜெனீவா போனார்.

அவருடன் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, வாசுதேவ நாணயக்கார, நிமல்கா பெர்ணான்டோ ஆகியோரும் போனார்கள். மகிந்தவின் நண்பியான தமரா குணநாயகம் என்ற தமிழ் பெண்ணும் இவர்களுக்கு துணை இருந்தார்.

ஜெனிவாவில், ஐநாவிடம் மட்டுமல்ல, சர்வதேச மன்னிப்பு சபையிடமும் இலங்கை அரசுக்கு எதிராக இவர்கள் புகார் செய்தார்கள்.

இவர்கள் ஜெனிவா போகும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், இவர்கள் கொண்டுபோன, காணாமல் போன, கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் பற்றிய ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

அது பற்றி பிறகு பாராளுமன்றத்தில் பேசும் போது, “ஒரு எம்பியான என்னிடம் உங்கள் பொலிஸ் அடாவடி செய்தது. எனது ஆவணங்களை பறித்தது. எனது மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, புகாரிட, நான் உலகின் எங்கே வேண்டுமானாலும் செல்வேன். மீண்டும், மீண்டும் செல்வேன். இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் என சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுப்பேன்” என இலங்கை அரசை எதிர்த்து மனித உரிமை போராளி மஹிந்த ராஜபக்ச எம்பி சொன்னார்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின், இதே மனித உரிமை போராளி மகிந்த நாட்டின் ஜனாதிபதியாகிய பிறகு, 2006-2009 காலத்தில் கொடும் யுத்தம் நடைபெற்ற போது, கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, காணாமல் அடித்து, அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியபோது, அதை எதிர்த்து, இன்றுபோல் அன்றும் கொழும்பு எம்பியாக, இருந்த நான், மக்கள் கண்காணிப்பு குழு என்ற மனித உரிமை அமைப்பை அமைத்தேன்.

பல ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்தி, அன்றைய ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஹார்பரை இலங்கைக்கு வரவழைத்து, எமது அவலத்தை உலகமயமாக்கினோம்.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பொலிஸ், ஒரு எம்பியான என்னை TID என்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசுக்கு கொண்டு போய் எட்டு மணித்தியாலம் வைத்து, தண்ணீர் கூட தராமல் மிகவும் கடுமையாக மிரட்டி விசாரித்து பார்த்தது.

அன்றைய அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் மற்றும் இந்தியா, ஐரோப்பிய யூனியன் தூதுவர்களின் தலையீடு காரணமாகவே நான் விடுவிக்கப்பட்டேன்.

ஆனாலும் என்னை இனம் தெரியாத கொலைக்குழு நபர்கள் பின் தொடர்ந்தார்கள்.

எனக்கு “சுதந்திர காவலன்” (Freedom Defender) என்ற விருதும் அமெரிக்க அரசால் வழங்கப்பட்டது. ஐநா செயலாளர் நாயக அலுவலகம் என்னை பாதுகாப்பு பற்றி தன் அக்கறையை, இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

இந்த சர்வதேச கண்காணிப்பால் நான் உயிர் பிழைத்தேன். எனினும் மிக, மிக சவால்மிக்க கொடுமையான காலம் அதுவாகும்.

இன்று சரித்திரம் திரும்புகிறது.

1990 வருடத்தில், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளைஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக…

1990 வருடத்தில், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளைஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *