தேவதைகளின் பயணமிது

  • 14

வானவில் வாழ்க்கையிது
பல வண்ணப் பயணமிது
பாதைகளுக்கு முடிவிருக்கலாம்
பயணங்களுக்கு முடிவில்லை

பெண்ணே! காற்றிற்கு யாரும்
வழிகாட்டுவதில்லை
அது தன் பயணத்தை
நிறுத்துவதுமில்லையே
நீயும் காற்றைப்போல் பயணப்படு
உன் தேடலின் வேட்கை
உன் செயல்களில் தெரியட்டும்

ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்கள்
இருப்பதைக்கண்டு நிலவு
தன் வரவை நிறுத்துவதில்லையே
அது ஒற்றை என்றும் ஒளிரும்
நீயும் அது போல் துணிந்து நில்!

நடந்து முடிந்தவை பற்றி
ஒருபோதும் எண்ணாதே
மழையே நின்ற பின்
தூறல் பற்றிய கதை ஏன்?

உன்னால் எதிர்கொள்ள முடியாத
சூழ்நிலைகளை
மௌனத்தினால் கடந்து செல்
“மௌனம்” – அது
சக்திவாய்ந்த ஆயுதம் அல்லவா?

உன் ஒவ்வொரு விடியலையும்
உன் தேடலின் படிக்கற்களாய்
அமைத்துக்கொள் – உன்
வினாக்களில் இருக்கும்
ஆர்வம் விடைகளிலும் இருக்கட்டும்

நிறையுள்ள பொருளுக்கு தான்
பூமியில் இடமுண்டு – அதை
உன் சிந்தனையில் ஏற்று
நிதானமாய் யோசி!
உனக்கு புரியும் சுமைகள் சுகமாகும்

பெண்ணே! நிழல்களின்
கண் கொண்டு உலகைப் பார்க்காதே
நிஜத்தின் கண்கொண்டு பார் கலங்காதே!

மாயை நிறைந்த கனவுலகில் மூழ்காதே!
யதார்த்தத்தை உணர்ந்திடு!
நிஜங்களுடன் போராடு!
உன்னை அறி – உண்மை தெரியும்!
உனக்குப் புரியும்!
உலகம் அழகாய் தெரியும்!

என்றும் நீ உன்னிடத்தில்
தோற்றுவிடாதே – உன்
எண்ணங்களை சாதித்திடு!
இன்று நீ உன்னை வென்றிருந்தால்!
நாளை நீ உலகை வெல்வாய்!
தேவதைகளின் பயணமிது!

Jàzira Junaideen
Medawachchiya (UoC)

வானவில் வாழ்க்கையிது பல வண்ணப் பயணமிது பாதைகளுக்கு முடிவிருக்கலாம் பயணங்களுக்கு முடிவில்லை பெண்ணே! காற்றிற்கு யாரும் வழிகாட்டுவதில்லை அது தன் பயணத்தை நிறுத்துவதுமில்லையே நீயும் காற்றைப்போல் பயணப்படு உன் தேடலின் வேட்கை உன் செயல்களில்…

வானவில் வாழ்க்கையிது பல வண்ணப் பயணமிது பாதைகளுக்கு முடிவிருக்கலாம் பயணங்களுக்கு முடிவில்லை பெண்ணே! காற்றிற்கு யாரும் வழிகாட்டுவதில்லை அது தன் பயணத்தை நிறுத்துவதுமில்லையே நீயும் காற்றைப்போல் பயணப்படு உன் தேடலின் வேட்கை உன் செயல்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *