என் தந்தைக்கு ஓர் மடல்

  • 70

இளம் வயது முதல்
இன்று வரை
கடமையில் கண்ணாய்
இருந்து கண் இமை
போல் என்னை(எம்மை)
காக்கும் தந்தையே

கேட்டபோதெல்லாம்
பணம் தந்து
கேட்டதையெல்லாம்
வாங்கி தந்து
ஐம்பது வருட வாழ்க்கையில்
உமக்காக எதையும்
சேர்க்கவில்லை
எ(ம)னக்கு எதைச் சேர்க்கவும்
மறக்கவில்லை

நீர்பட்ட கஷ்டம்
சிந்திய வியர்வை
செய்த தியாகம்
அத்தனையும் என்
வளர்ச்சிக்கான உரம்

உம் ஊக்குவிப்பும்
அரவணைப்பும்
என் தைரியம்
உம் பாதுகாப்பு
என் பக்கபலம்
உம் ஒற்றை வார்த்தை
என் வாழ்க்கை

தந்தையே நீர்
ஒய்வெடுக்க நேரமில்லை
ருசிக்காக உண்டதில்லை
பகட்டுக்காக உடுத்தவில்லை
ஆடம்பர செலவில்லை
ஆனால் எ(ம)னக்கு
எதைச் செய்யவும் தவறவில்லை

கண்டிப்பும் கண்ணியமும்
பொறுமையும் பாசமும்
நம்பிக்கையும் நாணயமும்
உம்மிடம் நான்
கற்ற விலைமதிக்க
முடியாத பாடங்கள்

இம்மையின் தேடல்களை விட
மறுமைக்கான
தயார்ப்படுத்தலையே
உம்மிடம் அதிகம்
கண்டேன்
கற்றுக் கொண்டேன்

எளிமையான தோற்றம்
சாந்தமான முகம்
அமைதியான போக்கு
அழகான பேச்சு
உதட்டிலே புன்னகை
அத்தனையும்
உமக்கான அடையாளம்

அன்பையும்
ஆசாரத்தையும்
அணுதினம் புகட்டினீர்
எம் ஐவருக்கும்

சகோதரி மருமகள்
மனைவி தாய்
என நான் பல
பாத்திரங்கள்
ஏற்றாலும் உமக்கு
மகள் என்பதிலேயே
பெருமிதம் கொள்கிறேன்

செயல்களால் என்
அன்பை வெளிப்படுத்தாத
போதும்
உம்மை அளவு
கடந்து நேசிக்கிறேன்
அன்பு தந்தையே

என் வாழ்க்கையின்
அங்கீகாரம்
அர்த்தம்
முன்மாதிரி
முதல் ஆண்மகன்
அத்தனையும் நீர்
நீீீர் தந்தையே

உமக்கான என்
கவி வரிகள்
உண்மையானவை
உன்னதமானவை

தந்தையே இது
உமக்கு சமர்ப்பணம்
நான் உமக்கே
அர்ப்பணம்!

Rushdha Faris,
South Eastern University of Sri Lanka.

இளம் வயது முதல் இன்று வரை கடமையில் கண்ணாய் இருந்து கண் இமை போல் என்னை(எம்மை) காக்கும் தந்தையே கேட்டபோதெல்லாம் பணம் தந்து கேட்டதையெல்லாம் வாங்கி தந்து ஐம்பது வருட வாழ்க்கையில் உமக்காக எதையும்…

இளம் வயது முதல் இன்று வரை கடமையில் கண்ணாய் இருந்து கண் இமை போல் என்னை(எம்மை) காக்கும் தந்தையே கேட்டபோதெல்லாம் பணம் தந்து கேட்டதையெல்லாம் வாங்கி தந்து ஐம்பது வருட வாழ்க்கையில் உமக்காக எதையும்…

3 thoughts on “என் தந்தைக்கு ஓர் மடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *