யாருக்கு வெற்றி?

  • 18

எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

இன்று இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். இங்கு விடயம் பற்றி பேசுவதெல்லாம் நோக்கமல்ல. வழமை போல் எனது பங்களிப்பை நிறைவேற்றவே இந்த பதிவு.

நான் ஒரு விடயத்தை தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன். இது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் கிடைத்த மகிழ்ச்சி அல்ல. நன்றி மறந்தவர்களாக முஸ்லிம் சமூகம் ஆகிவிடாதீர்கள். நல்லடக்க உரிமைக்காக முஸ்லிம் சமூகம் மற்றும் போராடவில்லை. இந்நாட்டின் பெரும்பாலான பெரும்பான்மை சமூகமும் எமக்காக குரல் கொடுத்தது. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க அனுப்பியவர்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வாயை மூடி இருந்த போது ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எமக்காக பேசிய பெரும்பான்மை அரசியல் தலைவர்களை மறந்துவிடாதீர்கள்.

பெரும்பாலான பிக்குகள் எம்கு ஆதரவாக பேசினார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். பெரும்பான்மை சமூக விஞ்ஞானிகள் வைத்தியர்கள் எமக்காக குரல் கொடுத்தார்கள் என்பதை மறவாதீர்கள். அயல் நாடு இந்தியாவில் இருந்து எமக்காக குரல் கொடுத்த இந்து மற்றும் முஸ்லிம் உறவுகளை மறந்துவிடாதீர்கள். உலகின் பல நாடாளுமன்றங்களில் எமக்காக குரல் எழும்பியது என்பதை மறவாதீர்கள்.

ஜெனீவாவில் எமக்கான குரல் ஒலித்தது என்பதை மறவாதீர்கள். கனடாவில் எமக்காக குரல் கொடுத்தார்கள் என்பதை மறவாதீர்கள். நோர்வே எமக்காக குரல் கொடுத்தது என்பதை மறவாதீர்கள். அமெரிக்கா பாகிஸ்தான் உட்பட இன்னும் ஏராளமான முஸ்லிம் அல்லாத நாடுகள் எமக்காக குரல் கொடுத்தன என்பதை மறவாதீர்கள்.

நான் இங்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. நீங்கள் 24ஆம் திகதி ஒரே இடத்தில் கட்சி பேதமின்றி போராட்டத்தில் இறங்கியதை பாராட்டுகிறேன். ஆனால் அதற்கு உஙாகளுக்கு 11மாதம் தேவைப்பட்டது.

நான் இங்கு விஷேடமாக வடகிழக்கு தமிழ் கிறிஸ்தவ மக்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். விஷேடமாக சுமந்திரன் ஐயா மற்றும் சாணக்கியன் ஐயா அவர்களை முஸ்லிம் சமூகம் ஒரு நாளும் மறக்கக்கூடாது.

இங்கு இறுதியாக ஒரு விடயத்தை குறிப்பிட நினைக்கிறேன். ஊர் இரண்டு பட்டால் தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு எவருக்கும் திருப்தியளிக்காத நேரத்தில் தமிழ் மக்களின் பல பிரச்சனைகள் தீர்வின்றி காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் தமிழ் கிறிஸ்தவ மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மூவின சிறுபான்மை சமூகமும் ஒன்றாக இருந்துபோராட வேண்டும். இது ஒன்றுபட்ட ஊரை குழப்பி பிரிக்க வந்த வெற்றியாக கூட இருக்கலாம். இந்தநிலையில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இறுதியாக ஒட்டு மொத்த உலகுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பாக எனது நன்றிகள் உரித்தாகட்டும். ஒன்றாக கைகோர்த்த நாம் பிரியாமல் இருக்க வேண்டும்.

நன்றி
பஸீம் இப்னு ரஸுல்

எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். இன்று இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். இங்கு விடயம் பற்றி பேசுவதெல்லாம் நோக்கமல்ல. வழமை போல் எனது பங்களிப்பை நிறைவேற்றவே இந்த பதிவு. நான்…

எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். இன்று இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். இங்கு விடயம் பற்றி பேசுவதெல்லாம் நோக்கமல்ல. வழமை போல் எனது பங்களிப்பை நிறைவேற்றவே இந்த பதிவு. நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *