அமைச்சர் அலிஸப்ரி அவர்களின் புர்கா தடை அறிவிப்பு சரியானதா?

  • 53

ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேளை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார். உண்மையில் இது சரியான வழிமுறையா ?

இந்த நாட்டிற்கு நாம் வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக பிரஜைகள். ஏனைய மக்களுக்கு உள்ள உரிமையே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் உண்டு. முஸ்லிம் மக்களின் உரிமைகளை ஏனைய இன மக்கள் தீர்மானிக்கும் நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கக்கூடாது. ஏனைய இனங்களுக்கு வரையறை இன்றி திறந்து உடுப்பதற்கு அனுமதி இருக்குமேயானால், முஸ்லிம் சமூகத்திற்கும் மூடி உடுப்பதற்கும் அனுமதி உண்டு.

புர்கா தடை செய்யப்படும் அளவுக்கு இந்த நாட்டில் புர்கா அணிந்து கொண்டு போய் எந்த நாசகாரச் செயலும் நடை பெறவில்லை. இதை இன உரிமையை பறிக்க ஒரு சந்தர்ப்பமாகவே பயன்படுத்துகின்றனர்.

இதற்கு நாமே துனை போவது ஒரு கவலைக்குறிய விடயமாகும். ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஜனாஸா அடக்கம் செய்யும் கடமையையும் உரிமையையும் பெற்றுத்தர முடியாமல் போன நிலையில், நமது உரிமையை பறிக்க உதவுவது தவறான வழி முறையாகும். முகத்தை மறைப்பதையும் மறைக்காதிருப்பதையும் முஸ்லிம் சமூகமே தீர்மானிக்க வேண்டும்.

ஜனாஸா அடக்கும் அறிவிப்போடு சேர்த்து இதையும் அறிவித்ததானது, ஜனாஸா அடக்கத்தை எதிர்த்த இனவாதிகளின் மனதை குளிர வைக்கை செய்த ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. அடுத்தது சட்டம் அமுலாகும் முன் இவ்வாறான அறிவிப்பானது தற்சமயத்தில் இருந்தே இன வாதிகள் சட்டத்தை கையில் எடுக்க வாய்பாக அமையும்.

மேலும் முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக முகத்திரை அணிந்தே வருகின்றனர். அதை அரசுக்கு எடுதுரைப்பதன் மூலம் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி, முகத்திரை தடையை தடுக்க, இதை ஒரு சந்தர்பமாக பயன்படுத்தி இருக்கலாம். மேலும் சுற்றுலாப் பயணிகளினால் இவ்வாறான பிரச்சினை நாட்டுக்குள் ஏற்படும் நிலையில், இது உள்நாட்டு முஸ்லிம்களின் தலையில் பொழுது விடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜனாஸா அடக்கும் உரிமை உலகலாவிய ரீதியில் மனித குலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமையாகும். இது இன வெறி கொண்ட இனவாதிகளால் எமது நாட்டில் இது பறிக்கப்பட்டது. இதை நாம் பெற்று கொள்ள இன வாதிகளை திருப்திப்படுத்த வேண்டியதில்லை.

மேலும் கடந்த காலத்தில் நடந்த அசம்பாவிதங்களின் போது நாட்டில் முகத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்ட போது? மகாநாடு கூடி உரிமைக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று சூளுறைத்தவர்கள், இந்த அரசாங்கம் இதை தடை செய்ய முற்படும் போது பேசாமல் வாய் பொத்தி இருப்பது கவலைக்குறிய விடயமாகும். இவர்கள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போது மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி அடக்கும் உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராடாமல் A/C Room இல் இருந்து letter எழுதி விட்டு A/C Room இல் இருந்தே சாம்பல் பத்வாவை எழுதி சாம்பலை அடக்க மார்கத்தில் அனுமதியுண்டு என மக்களை ஏமாற்றி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, அரசின் இன உரிமை ஒளிப்பு இடைத்தரகர்களாக செயற்பட்டது போல் இதிலும் செயற்படுவார்களா?

முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளின் காப்பாளர்கள் என்பதை வஃன் என்ற நோய் இவர்களை திசைதிருப்பி விட்டது.

மக்களுக்கு பிரச்சினை வரும்போது ஓடி ஒழிந்து தியானத்தில் இருப்பது இஸ்லாமிய தலைமைத்துவத்தின் வழி முறை அல்ல. மக்களோடு மக்களாக இருந்து அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்றுவதே தவைமைத்துவம். இதற்கான வழிமுறையையே நம் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்களும் அவரை தொடர்ந்து வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வாழ்விலும் அவர்கள் நமக்கு காட்டித் தந்தார்கள்.

எனவே இந்த நாட்டில் நாம் வாழ எமது உரிமைகளை ஏனைய சமூகங்களுக்கு லஞ்சமாக கொடுக்கும் நிலமையை நம் அரசியல் தலைமைகள் உருவாக்கக் கூடாது.

பேருவளை ஹில்மி

ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேளை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார். உண்மையில் இது சரியான வழிமுறையா ? இந்த நாட்டிற்கு நாம் வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக…

ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேளை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார். உண்மையில் இது சரியான வழிமுறையா ? இந்த நாட்டிற்கு நாம் வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக…

10 thoughts on “அமைச்சர் அலிஸப்ரி அவர்களின் புர்கா தடை அறிவிப்பு சரியானதா?

  1. What i don’t realize is actually how you are not actually much more well-liked than you may be right now. You’re so intelligent. You realize therefore considerably relating to this subject, produced me personally consider it from a lot of varied angles. Its like women and men aren’t fascinated unless it’s one thing to accomplish with Lady gaga! Your own stuffs great. Always maintain it up!

  2. Good day! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in trading links or maybe guest writing a blog post or vice-versa? My website addresses a lot of the same topics as yours and I think we could greatly benefit from each other. If you might be interested feel free to shoot me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  3. When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get three emails with the same comment. Is there any way you can remove people from that service? Thank you!

  4. I will right away grab your rss feed as I can’t in finding your email subscription link or newsletter service. Do you have any? Please permit me realize so that I may just subscribe. Thanks.

  5. What¦s Going down i am new to this, I stumbled upon this I’ve found It absolutely useful and it has helped me out loads. I hope to give a contribution & aid other users like its aided me. Good job.

  6. Woah! I’m really digging the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s very hard to get that “perfect balance” between user friendliness and visual appearance. I must say that you’ve done a amazing job with this. Also, the blog loads very fast for me on Chrome. Excellent Blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *