திருப்தியடைந்த உள்ளம்

  • 54

பொதுவாக மனிதன் தனது வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும், கஷ்டப்பட வேண்டும் ஆயினும் தனக்குக் கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாகும்.

இன்று எமது வாழ்க்கையில் நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் பாரிய தாக்கம் செலுத்துகிறது. திருப்தியில்லாத மனம் நிம்மதியை இழக்கும். எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் திருப்தியில்லை, யாரைப்பார்த்தாலும் ஏதாவது குறை, அதிருப்தியை வெளிக்காட்டுவார்கள்.

பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை எடுத்தும் திருப்தியில்லை, வசதி வாய்ப்புக்கள் பெற்றிருந்தும் திருப்தியில்லை, நல்ல தொழிலை பெற்றிருந்தும் திருப்தியில்லை, சிறந்த துணை கிடைத்தும் திருப்தியில்லை.

இவ்வாறு யாரை எடுத்தாலும் எந்த விடயமாக இருந்தாலும் அதிருப்தியை வெளிக்காட்டுகிறார்கள். காரணம், போதும் என்ற மனமின்மையே ஆக, அதிருப்தி எமது வாழ்க்கையை நரகமாக்கிடும்..

இப்னு கையிம் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

“திருப்தியே அனைத்து சிரமங்களுக்குமான மருந்து.  மாத்திரைகள் தராத நிவாரணத்தை மனதிருப்தி தரும்”

ஆக இறை விதியைக் குறித்து திருப்தி கொள்வது மனிதனுக்குப் பெரும் நிம்மதியை கொடுக்கும்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபுதர் (ரழி) அவர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்தார்கள்.

“அபுதர்! செல்வச் செழிப்புதான் உண்மையான தன்னிறைவு என்று எண்ணாதே உள்ளத்தின் ஏழ்மை தான் உண்மையான ஏழ்மை. உள்ளத்தில் தன்னிறைவு கொண்டவரை உலகத்தின் மாற்றங்களால் எதுவும் செய்ய முடியாது. உள்ளத்தில் ஏழ்மை இருப்பவரிடம் உலகத்தையே கொடுத்தாலும் தன்னிறைவு ஏற்படாது.” என்றார்கள்.

நபித்தோழர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

இன்று பலர் நிம்மதியில்லாமல் புலம்பிக் கொண்டிருப்பதற்கான காரணம்,

“நம் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களைப்பற்றி கவலைப்படுதல்”

அதேபோல் எமக்கு கிடைக்கப் பெற்றதை திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளாமை இதனாலேயே பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தும் நியதிகளை திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் எமக்காக விரும்பியதை நாம் இறைவனுக்காக விரும்பி திருப்தியடையக் கூடாதா?

பெரும் சோதனைகளிலே பெரும் நற்கூலி உள்ளது என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும்.  அதேபோல் அவன் தந்த அருட்கொடைகளிலும் மனநிறைவு அடைய வேண்டும்.

நாம் அல்லாஹ்விடம் எதையாவது கேட்கிறோம். அதை அல்லாஹ் தந்தால் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அதை அல்லாஹ் தரவில்லையானால் கவலை அடைவதை விட்டுப் பல தடவை மகிழ்ச்சி அடையவேண்டும்.

காரணம் இதைத் தந்தமை எம் தெரிவு அதை தடுத்தமை அல்லாஹ்வின் தெரிவு எமது தெரிவை விட அல்லாஹ்வின் தெரிவு மிகச்சிறந்தது என்று திருப்தியடைய வேண்டும்.

நீ கேட்டதை தருவது மட்டும் இல்லை அல்லாஹ்வின் வேலை, தடுப்பதும் அல்லாஹ்வின் வேலை தான்.  நீங்கள் நாடியது நடக்காவிடினும் அதை விடச் சிறந்தது நடக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.

நடந்தது எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி திருப்தி கொள்ளுங்கள்.

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள் ஆனால் அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள் ஆனால் அது தீமையாக இருக்கலாம். அல்லாஹ்வோ அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (02: 216)

எனவே, எமக்காக வடிவமைக்கப்பட்ட இறை ஏற்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
எவ்வாறாயினும் மனிதன் என்ன தான் முயற்சியை மேற்கொண்டாலும் இறைவன் விதித்தது மட்டுமே அவனுக்கு கிடைக்கும். என்பதே உண்மை. எனவே இறைவன் தந்தவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வோம், தன்னிறைவு கொண்டவர்களாய் மாறுவோம் இன்ஷா அல்லாஹ்.

Faslan Hashim

பொதுவாக மனிதன் தனது வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும், கஷ்டப்பட வேண்டும் ஆயினும் தனக்குக் கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாகும். இன்று எமது…

பொதுவாக மனிதன் தனது வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும், கஷ்டப்பட வேண்டும் ஆயினும் தனக்குக் கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாகும். இன்று எமது…

10 thoughts on “திருப்தியடைந்த உள்ளம்

  1. I am now not positive the place you’re getting your info, however good topic. I must spend some time learning more or understanding more. Thank you for fantastic information I used to be looking for this info for my mission.

  2. Whats Happening i’m new to this, I stumbled upon this I have discovered It positively helpful and it has aided me out loads. I hope to contribute & assist other customers like its aided me. Good job.

  3. Very nice post. I just stumbled upon your weblog and wanted to say that I’ve truly loved surfing around your blog posts. After all I will be subscribing to your rss feed and I am hoping you write once more very soon!

  4. I have recently started a web site, the information you provide on this web site has helped me tremendously. Thank you for all of your time & work.

  5. Thank you for another wonderful article. Where else could anybody get that kind of information in such an ideal way of writing? I’ve a presentation next week, and I’m on the look for such information.

  6. You can certainly see your enthusiasm in the paintings you write. The sector hopes for more passionate writers like you who are not afraid to say how they believe. All the time follow your heart.

  7. Hi , I do believe this is an excellent blog. I stumbled upon it on Yahoo , i will come back once again. Money and freedom is the best way to change, may you be rich and help other people.

  8. It’s actually a nice and useful piece of information. I am satisfied that you shared this helpful information with us. Please keep us up to date like this. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *