மாதவம் செய்வோம் வாரீர்

  • 17

மாதராய் நாம் பிறந்தது
இம் மண்மீது புனிதங்கள் பல
செய்திடத்தானே!
இறைவனின் படைப்பில்
உன்னதம் மிக்கது
மனிதப் படைப்பு!
மனிதப் படைப்பிலும்
மேன்மை தங்கியது பெண் என்பாள்!

பிறப்பெண்ணும் உயிரின்
தோற்றுவாயிற்கும்!
இறப்பெண்ணும்
உலக வாழ்வின்
முடிவிற்குப் மத்தியிலே!
இறைவனின் சந்நிதியில்
அவனுடனே போராடி!
தன்னுடன் இணைத்தோ,
தான் இல்லாமலோ!
இன்னொரு உயிரை
உலகுக்குப் பரிசளிக்கும்
உத்தம உயிரான
பெண்களுக்கான தினமே!

அடுப்பங்கரை அறைக்குள்ளும்
நாலு சுவற்றின் வரையறைக்குள்ளும்
தன் வாழ்வையே தியாகம் செய்து
வாழும் உத்தமிகளின் தினமே!
ஆணென்னும் மமதை கொண்டார் மத்தியிலும்
அன்பெனும் பொறுமை தனை துளிர்த்து
சமத்துவத்தை தளிர்த்து
வளரச் செய்த மாதருக்கான தினமே!

உரிமைகள், சுதந்நிரங்களின்
அறிமுகங்கள் மறந்து!
வீட்டுச் சிறைக்கைதியென
காலமெல்லாம் கிடந்து!
வெளியேறும் காலம் வந்தவுடன்!
பெண்ணுரிமை என்னும் கோசத்தால்
உலகப் பெண்களுக்கெல்லாம்
விடுதலை பெற்றுத் தந்த
பெண்வீராங்கனைகளின் தினமே!

கற்பழிப்புக்களுக்கும்,
கன்னியர் மானச்
சிதைப்புக்களுக்கும் என்று
படைக்கப்பட்டிருந்த பெண்கள்

சமுதாயத்தை!
கல்வியென்றும்,
கன்னியமென்றும்!
சுய மரியாதையென்றும்,
சுயதொழிலென்றும்!
சமூகத்தில் பெண்களின்
பங்களிப்பு என்றும்!
பெண்களின்
உரிமைகளுக்கும்
சுதந்திரங்களுக்கும்
பட்டயம் இட்ட தினமே!

கயவர்களும், கல்வர்களும்,
நயவஞ்சகர்களும் வாழும்
இந்த உலகைக் கூட!
நற்பொறுமை, நன்னடத்தை
கொண்டு தாங்கிக் காக்கும்
பூமித் தாயினதும் தினமே!

நீ வருக வருக
இவ்வாண்டும் எவ்வாண்டும்!
நீ வருடத்தில் ஒரு நாள் மாத்திரம்
அனுஷ்டிக்க வேண்டிய தினமல்ல!
வருடம் முழுவதுமே உன் தினமே!
மங்கையாய் பிறப்பதாயின்
மாதவம் செய்திட வேண்டும்!
அனைத்துலக மகளிரே!
மாதவம் செய்வோம் வாரீர்!

அனைத்துலவாழ் பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

மாதராய் நாம் பிறந்தது இம் மண்மீது புனிதங்கள் பல செய்திடத்தானே! இறைவனின் படைப்பில் உன்னதம் மிக்கது மனிதப் படைப்பு! மனிதப் படைப்பிலும் மேன்மை தங்கியது பெண் என்பாள்! பிறப்பெண்ணும் உயிரின் தோற்றுவாயிற்கும்! இறப்பெண்ணும் உலக…

மாதராய் நாம் பிறந்தது இம் மண்மீது புனிதங்கள் பல செய்திடத்தானே! இறைவனின் படைப்பில் உன்னதம் மிக்கது மனிதப் படைப்பு! மனிதப் படைப்பிலும் மேன்மை தங்கியது பெண் என்பாள்! பிறப்பெண்ணும் உயிரின் தோற்றுவாயிற்கும்! இறப்பெண்ணும் உலக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *