காத்திருக்கிறேன்

  • 20

இன்றா நாளையா
எப்போது நேர்வது உன் வரவு?
என்றுதான் தீருவது என் கனவு?
காத்திருக்கிறேன் அன்பே
காத்திருக்கிறேன்

தொலைதூரம் நீயிருக்கையில்
வலிக்கிறது இதயம்
மூன்றாண்டாய் உன் முகம்காண
துடிக்கிறது யென் இதயம்

கடல்தாண்டி சென்ற உறவே
கண்முன்னே வந்து விடு
கண்வழியும் நீர்த்துளிகளை
உன்கரம்கொண்டு துடைத்திடு

நிறைய பணம் நீ உழைத்தும்
நிம்மதியாய் நானில்லை
உறவுகளென் அருகிலிருந்தும்
உன் இருப்புக்கு ஈடில்லை

எந்தக் குறையுமில்லாமல்
எனைப் பார்த்து கொள்ள
ஆசை உனக்கு ஆனால்,
என்னவன் நீ அருகிலிருந்தால்
குறைகளே இல்லையடா எனக்கு

தொலைபேசியில் கதைத்தாலும்
போதவில்லை எனக்கு
மணிக்கணக்கில் பேசித்தீர்த்தும்
மீதமின்னும் இருக்கு

அடுக்கடுக்காய் நம்மவர்கள்
வெளிநாட்டில் இறந்துவிட
அடிக்கடி என் மனது
வேதனையில் துடிக்கிறது
கணவனே உனை எண்ணி
கண்கள் நீர் வடிக்கிறது

போதும் உன் வெளிநாட்டு
உழைப்பு போதும்
விரைவில் நீ வந்து விடு!
காத்திருக்கிறேன் வந்து விடு!

உழைக்கும் திறமை உன்னிடம் – அதை
சேமிக்கும் திறமை என்னிடம்
வியர்வை சிந்தும் போது உனக்கு
விசிறிட இரண்டு கைகள் எனக்கு

இருக்கும் போது உணவையும்
இல்லாத போது பட்டினியையும்
இருவருமே பகிர்ந்து கொள்வோம்
வந்துவிடு இன்றே வந்து விடு!

விலைமதிப்பில்லா செல்வம் நீ
வெகுதூரமிருக்க
விதவிதமாய் நகைகளும்
விலையுயர்ந்த உடைகளும்
எதற்கடா எனக்கு?

காத்திருக்கிறேன்.
அன்பே! வந்து விடு
காத்திருக்கிறேன்

Rustha Salam

இன்றா நாளையா எப்போது நேர்வது உன் வரவு? என்றுதான் தீருவது என் கனவு? காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன் தொலைதூரம் நீயிருக்கையில் வலிக்கிறது இதயம் மூன்றாண்டாய் உன் முகம்காண துடிக்கிறது யென் இதயம் கடல்தாண்டி சென்ற…

இன்றா நாளையா எப்போது நேர்வது உன் வரவு? என்றுதான் தீருவது என் கனவு? காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன் தொலைதூரம் நீயிருக்கையில் வலிக்கிறது இதயம் மூன்றாண்டாய் உன் முகம்காண துடிக்கிறது யென் இதயம் கடல்தாண்டி சென்ற…