இஸ்லாத்தில் பெண்ணுரிமை

  • 37

மண்ணின் தாரகையாய்
பேதையவள் உதித்த வேளை
போதை எனப் பொருள் கொடுத்து!
மங்கை இவள் பிறந்தாலே
மண்ணிற்கு பரிசளிக்க!
மடையர் கூட்டம் அன்று
மந்தை போல் கிளம்பியது!

மனைவியவள் மானம் காக்க
மறைந்து அவள் வாழ்ந்தாலும்
தலைவன் எனும் பெயர் கொண்டு
“விலை மாது” எனப் பெயர் கூட்டி
விற்பனையில் விளையாடும்
விலை பொருளாய்
பெண் வாழ்க்கை மாறியது!

அன்பிற்கு ஏங்கியவளை
அடிமை போல் சிறைப்படுத்தி
இழிவு தரும் இன்னல்களை
இதயமின்றி அழித்திடவே
வலி அறிந்தும் வழி அறியா
பிணைக்கைதி ஆகிய வேளை

மண்ணிற்கு முழு மதியாய்
னமார்க்கமது துளிர் விடவே
பெண்ணிற்கு பெயரே
பெண்மை எனும் மென்மை
தான் என பெண்ணவளே
அறியாது பாரிற்கு உணர்த்தியது!

மாதராய் நாம் இன்று
மண்ணிலே புனிதம் பெற
சிப்பிற்குள் முத்துப் போல்
ஷரியாவின் சட்டத்தை
மங்கைகாய் மாற்றியது!

விலை பொருளாய்
வியாபாரமான விலை மாது
எனும் பொம்மைகளை
வீட்டிற்குள் மிளிர வைத்து
மகளிரை மதியாக
மார்க்கத்தில் உயர்த்தியது!

அடுப்பறை மட்டும் அவளுக்கு
அறையல்ல என
கன்னிக்கு கல்வியினை
விளையாட்டில் வீராங்கனையை
உலகிற்கு உருமாற்றியது!

இகம் முழுதும்
பெண்ணுரிமையை
அனைவருக்கும் உணர்த்திடவே
இஸ்லாத்தின் பெண்ணுரிமை
அடிப்படையாய் விளங்கியது!

ShimA Haree§
University of Peradeniya

மண்ணின் தாரகையாய் பேதையவள் உதித்த வேளை போதை எனப் பொருள் கொடுத்து! மங்கை இவள் பிறந்தாலே மண்ணிற்கு பரிசளிக்க! மடையர் கூட்டம் அன்று மந்தை போல் கிளம்பியது! மனைவியவள் மானம் காக்க மறைந்து அவள்…

மண்ணின் தாரகையாய் பேதையவள் உதித்த வேளை போதை எனப் பொருள் கொடுத்து! மங்கை இவள் பிறந்தாலே மண்ணிற்கு பரிசளிக்க! மடையர் கூட்டம் அன்று மந்தை போல் கிளம்பியது! மனைவியவள் மானம் காக்க மறைந்து அவள்…