உன்னால் முடியும் முன்னால் வா டா!

  • 10

அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். எமது வீட்டுக்கு அருகாமையில் ஒரு வீட்டுடன் இணைந்து சில்லறைக் கடை இருந்தது.

அந்த வீட்டில் கேபிள் செனல் இருந்தது. எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் நாநாமார் அந்த வீட்டில் ஒன்று சேர்ந்து பார்ப்பது வழக்கம். அன்றெல்லாம் எல்லா வீடுகளிலும் டீ.வி இருக்காது. அதுவும் கேபிள் செனல் ஊருக்கே ஓரிரு வீடுகளில் தான் இருக்கும்.

அப்போது ஒருநாள் இரவு மஹ்ரிப் வேளையில் ஆகாரம் எடுப்பதற்கு அந்தக் கடைக்குச் சென்ற போது, அவுஸ்திரேலியா அணி வேர்ல்ட் ரெகோர்ட் வைத்ததாகவும். இதை முறியடிக்க இன்னும் ஒரு அணி பிறந்து வர வேண்டும் எனவும். இந்த ரெக்கார்ட்ஸ் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்காவது தொடர்ந்து இருக்கும் எனவும் நாநாமார்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாட்களில் இலங்கையணி தான் ஒருநாள் போட்டிகளில் கூடிய ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்திருந்தது 398 ஓட்டங்கள். அதை முறியடிக்க எத்தனையோ அணிகள் முயன்ற போதும் யாராலும் முடியவில்லை.

முதல் முறையாக அவுஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டிகளில் 400 ஓட்டங்களைத் தொட்டிருக்கிறது.

434 ஓட்டங்கள் அடித்து உலக சாதனை படைத்து விட்டது தான் பேசு பொருளாக மாறப் போகிறது என்று எனக்குப் புரிந்தது.

கிரிக்கெட் தலைக்கேறி இருந்த அந்நாட்களில் இப்படி ஒரு சாதனை படைத்த போட்டியைப் பார்க்காது விட முடியுமா?

அவசர அவசரமாக அந்தக் கடையில் தேவையான பொருட்களை வாங்கி விட்டு, உம்மாவிடம் ஏதோவொரு காரணத்தைக் கூறி விட்டு ஓடி வந்தேன் 2nd Innings பார்க்க அப்போது Highlights காட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

Simon katich ஒரு புறம் பிடித்து விக்கட்டில் நிற்க மறுபுறம் Gilchrist தகர்த்து 44 பந்துகளில் 55 ஓட்டங்களுடன் வெளியேற,
அடுத்த வந்த தலைவன் Ricky Ponting 105 பந்துகளில் 164 ஓட்டங்களை விளாசித் தள்ள, Michael Hussey யும் Andrew Symonds உம் தம் பங்கிற்கு பவுலர்களைத் துவைத்து எடுக்க, அவுஸ்திரேலியா 434 ஓட்டங்களை அடித்திருந்தது.

அந்தக் காலங்களில் Australia என்றாலே எதிரணியினர் நடுங்குவார்கள். வெற்றி வெறி பிடித்த கூட்டம் அது. தொடர்ந்து மூன்று முறை உலகக்கோப்பை சுவீகரித்த ஜாம்பவான்கள் அவர்கள்.

மஞ்சள் நிற Jersey ஐக் கண்டாலே உடம்பு Vibrate ஆகும். உலகின் முதல் நிலை அணி வேறு.

Bowling நெருப்பு போல இருக்கும், Batting வேற லெவல்’ல இருக்கும், Fielding பற்றி சொல்லவே வேண்டாம். கொங்ரீட் சுவர் எழுப்பியது போல இருக்கும்.

இவர்கள் சும்மாவே பயம் காட்டுவார்கள். இப்போது உலக சாதனை வேறு படைத்து விட்டார்கள் எதிரணியாம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எப்படி இருந்திருக்கும்.

கதிகலங்கி இருக்கும்’ல!

அன்றைய தென்னாபிரிக்கா அணியும் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரு அணி தான். சிறந்த வீரர்களைக் கொண்ட அணி தான்.

இருப்பினும், முதல் முறை 400 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விட்டதால் எப்படி இருந்திருக்கும் அவர்களது மனநிலை. கிட்டத்தட்ட தோல்வி ஊர்ஜிதமான நிலை.

சொந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த போட்டி வேறு. போட்டியை விட்டுக்கொடுக்க மனதும் இல்லாத நிலை. வெற்றி பெற வேண்டும் எனின், யாருமே செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும். உலக சாதனை படைக்க வேண்டும்.

தோற்றால், “வரலாற்றில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த அணி” என்ற பெயர்.

போராடித்தான் பார்ப்போமே என்று களமிறங்குகிறார்கள் அணித்தலைவர் Graeme Smith உடன், ஆரம்ப ஆட்டக்காரர் Boeta Dippenar.

முதல் ஓவர் வீசுகிறார் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் Brett Lee 3 ஓட்டங்கள். Bracken வீசிய 2 ஆம் ஓவரின், 2 ஆம் பந்திலேயே Dippenar Bowled.

ஆரம்பத்திலேயே விக்கெட் இழக்க தென்னாப்பிரிக்கா அணிக்கு Tension. அணித்தலைவருக்கு Pressure ஏறுவது முகத்தில் தெரிகிறது. அடுத்து களமிறங்குகிறார், Ultimate அதிரடி வீரர் Hershalle Gibbs.

இதெல்லாம் பார்த்தால் சரிவராதென்று Brett Lee வீசிய ஆட்டத்தின் 3ஆம் ஓவரின் முதலிரு பந்துகளிலும் பந்தை Boundary இற்கு விரட்டி வேகமெடுக்க ஆரம்பிக்கிறார் தலைவர் Smith. Gibbs ஒருபுறம் பிடித்து ஆட, Smith மறுபுறம் வெளுத்து ஆட 13 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களைத் தொடுகிறது South Africa அணி.

33 பந்துகளில் அரைச் சதமடித்த Smith Top Gear இல் பறந்து 55 பந்துகளில் 90 ஓட்டங்களுடன் 23 ஆவது ஓவரில் ஆட்டமிழக்கும் போது, அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 190.

அணித்தலைவரின் ஆக்ரோஷமான விளையாட்டால் புதுத் தெம்பு பெறுகிறது தென்னாபிரிக்கா அணி 27.5 ஓவரில் 245 ஓட்டங்கள் தேவை

T20 ஐக் காணாத அந்நாட்களில் இது சாதாரண இலக்கல்ல.

73 பந்துகளில் 84 ஓட்டங்களுடன் ஆடிக் கொண்டிருந்த Gibbs உடன் இணைகிறார், AB De villiers.

அணித்தலைவர் விட்டுச் சென்ற ஆக்ரோஷ ஆட்டத்தைத் தொட்டுப் பிடிக்கிறார் Gibbs.

ABD விக்கட்டில் தட்டி நின்று பிடிக்க, ரணகளமாடுகிறார் Gibbs பந்துகள் நாலா பக்கமும் பறக்க, Ricky Ponting இன் அணியினரின் தலை தெறிக்க 100 பந்துகளில் 150 ஓட்டங்களை தொடுகிறார் Gibbs.

Smith ஆட்டமிழந்த பின், தான் சந்தித்த 27 பந்துகளில் 64 ஓட்டங்கள். ஒரு புறம் அமைதியாக இருந்த ABD இதுதான் சந்தர்ப்பம் என்று, Bracken இன் பந்தை தூக்கி அடிக்கிறார். உயரே செல்கிறது பந்து Boundary ஐத் தாண்ட எத்தனிக்கும் போது, குறுக்காக வருகிறார் Michael Clark பிடி கொடுத்துப் பெவிலியன் திரும்புகிறார் ABD.

19 ஓவர்களில் 149 ஓட்டங்கள் தேவை பிடிக்கக் கூடிய இலக்கு தான். ஆட்டம் தென்னாபிரிக்கா அணியின் கைகளில். அடுத்து களமிறங்குகிறார் அன்றைய நாட்களின் Best All rounder Jacques kallis.

Symonds வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை Gibbs விளாச Pakistan இன் Saeed Anwar இன் அதி கூடிய ஓட்டமான 194 ஓட்ட உலக சாதனை கேள்விக்குறியில் இருக்கும் போது, அடுத்த பந்தில் Brett Lee இடம் பிடி கொடுத்து, 111 பந்துகளில் 175 ஓட்டங்களுடன் விடைபெறுகிறார். The one and Only Hershalle Gibbs.

299/4 என்று Score Board வாசிக்க, Kallis உடன் இணைகிறார், கீப்பர் Mark Boucher 18 ஓவர்களில், 136 ஓட்டங்கள் தேவை களத்தில் புதிய ஜோடி.

பின்னால் வேறு நம்பகரமான Batsman இல்லை விக்கட்டை இழந்தால் பிரச்சினை Pressure Situation.

Run a ball என்று விளையாடிக் கொண்டிருந்த Kallis 20 ஓட்டங்களுடன் Tata Bye சொல்ல  தென்னாப்பிரிக்கா இக்கட்டான நிலைக்குச் செல்கிறது.

ஆட்டத்தில் Australia செல்வாக்கு செலுத்த ஆட்டவேகம் ஆமைவேகமாகிறது.

Justin Camp உம் 17 பந்தில் 13 ஓட்டங்களுடன் பெவிலியனை நோக்கி ஓட 42.1 ஓவர்களில் 355/6. 47 பந்துகளில் 80 ஓட்டங்கள் தேவை எனும் நிலை.

அவுஸ்திரேலியரின் முகத்தில் சிரிப்பு. வெற்றி வாய்ப்பு அவர்களின் வசம். மீதியுள்ள 4 விக்கட்டுக்களையும் கழற்றி வீசி விடலாம் எனும் நம்பிக்கை.

Boucher பொறுமையாக ஒரு முனையில் இருக்க, மறுமுனையில் ஆட்டத்தின் போக்கையே மாற்றுகிறார். யாருமே எதிர்பார்க்காத தென்னாப்பிரிக்கா அணியின் Van Der wath.

Van Der wath துடுப்பைச் சுழற்றி மூன்று சிக்சர்களை விளாசி wonder wath ஆகிறார். Out of syllabus இல் இருந்து வந்த கேள்வியாக இருந்த Van Der wath இன் அதிரடிக்கு Nathen Bracken விடையளிக்க.

18 பந்துகளில் 35 ஓட்டங்களுடன் பெவிலியன் நோக்கி நடை கட்டுகிறார் Van Der wath.

21 பந்துகளில் 35 ஓட்டங்கள் தேவை. 34 பந்துகளில் 31 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார், தென்னாப்பிரிக்காவின் ஒரே நம்பிக்கை Boucher.

அடுத்து களமிறங்கிய Telemachus தன் பங்கிற்கு இரு பவுண்டரி அடிக்க, Boucher உம் பவுண்டரியினால் Australia பந்து வீச்சாளர்களை டீல் பண்ண 47 ஆவது ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி, வரலாற்றில் 400 ஓட்டங்களைத் தொட்ட இரண்டாவது அணியாக பதிவு செய்யப் படுகிறது.

அதே வேகத்தில் விளாச ஆட்டத்தின் 48 ஆவது ஓவரில் 17 ஓட்டங்கள் அடிக்கப் படுகிறது ஸ்கோர் 422/7.

இன்னும் இரண்டு ஓவர்களில் 13 ஓட்டங்கள் தேவை ஆட்டம் சூடு பறக்கிறது. Ricky Ponting முகத்தில் பரபரப்பு ரசிகர்கள் சீட் நுனியில் போட்டியின் முக்கிய ஓவரான 49 ஆவது ஓவரை வீசுகிறார் Bracken.

முதல் பந்தில் Boucher Single உடன் ஸ்ட்ரைக் மாற, 2ஆம் பந்தில் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த Telemachus ஆட்டம் இழக்கிறார்.

அடுத்து Andre Hall, அந்த ஓவரை சிறப்பாக வீசி மொத்தமாக 6 ஓட்டங்களுடன் மட்டுப் படுத்தி, கடைசி ஓவரில் 7 ஓட்டங்களை மீதம் வைக்கிறார். Bracken.

வரலாற்றில் இடம்பிடித்த அந்த கடைசி ஓவரை வீச வருகிறார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் Brett Lee.

முதல் பந்துக்கு Boucher முகம்கொடுத்து, இலாவகமாக ஒரு சிங்கள் போட. இரண்டாம் பந்தை விளாசுகிறார் Andrew Hall பந்து விரண்டோடுகிறது Boundary ஐ நோக்கி

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள். அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு இரண்டு விக்கட்டுகள். அனைத்து Pressure ஐயும் தோளில் சுமந்து அடுத்த பந்தை வீசுகிறார் Brett Lee.

சிறந்த ஒரு பந்து Hussey இடம் பிடி கொடுத்து விட்டு, கைக்கு எட்டிய வெற்றியைக் கேள்விக்குறியாக்கி விட்டு சோகத்துடன் பெவிலியன் திரும்புகிறார் Andrew Hall.

தென்னாப்பிரிக்கா அணியின் 9 ஆவது விக்கட் இழக்கப்படுகிறது. ஆட்டம் மேலும் சூடு பிடிக்கிறது.

Brett Lee இற்கு முகம்கொடுக்க கடைசி விக்கட்டாக களமிறங்குகிறார், தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் Makhaya Ntini.

Ntini எல்லாம் Brett Lee இன் முன்னால் தூசு தான். ஒரு யோர்க்கர், ஆள் காலி போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரினதும் கண்கள் விக்கட்டிலேயே குறியாக இருந்தது.

போட்டி Draw ஆக, ஒரே ஒரு ஓட்டம். தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள்.

ஆனால், அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கோ ஒரேயொரு விக்கட் அதுவும் Strike இல், தென்னாப்பிரிக்காவின் பதினொராம் இலக்க வீரர்.

Brett Lee பந்து வீசுகிறார். மிகச்சிறந்த ஓர் பந்து. எப்படியே Ntini இன் துடுப்பில் படுகிறது பந்து. விரைவாக ஓடுகின்றனர். ஒரு ஓட்டத்தைப் பெறுகின்றனர். ஓட்டங்களை சமன் செய்கின்றனர். வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர்.

இரண்டு பந்தில் ஒரேயொரு ஓட்டம். கைகளில் இருந்து நழுவிச் சென்ற போட்டியை draw ஆவது செய்ய வேண்டிய நிலையில் அவுஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்களும் Boucher ஐச் சுற்றியிருந்து களத்தடுப்பு செய்ய,

Boucher அடுத்த பந்தை தைரியமாக முகம் கொடுத்து விளாசுகிறார் அடித்த அந்த அடியுடன் ஓட முனையாது துடுப்பைத் தூக்கிக் கொண்டாடுகிறார். பந்து விரண்டோடுகிறது Boundary நோக்கி.

தென்னாப்பிரிக்கா வீரர்கள் தெறித்தோடி வருகிறார்கள் மைதானத்தை நோக்கி, Johannesburg wanderer’s மைதானம் வெற்றிக் களிப்பில் கொண்டாடி மகிழ்கிறது.

வர்ணனையாளர்கள் Commentary இல் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றிலேயே மிகப்பெரும் சம்பவம் ஒன்றைக் கண்கூடாக கண்ட பெரும் சந்தோசத்தில் ரசிகர்கள் துள்ளி குதித்து ஆரப்பரிக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி, அதிக ஓட்டங்களைப் பெற்ற அணியாக உலக வரலாற்றில் இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியா அணியின் உலக சாதனை அதே போட்டியில் தகர்க்கப்படுகிறது.

இந்த சாதனை ஆட்டம் இன்றைய தினத்தில் தான் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்றது இன்றுடன் பதினைந்து ஆண்டுகள். இந்தப் போட்டியின் மூலம் பல படிப்பினைகளைப் பெற முடியும்.

தமக்கெதிராக உலக சாதனையே நிகழ்த்தப் பட்டாலும், அதைத் தகர்த்தெறிய இன்னொரு உலக சாதனை தான் நிகழ்த்த வேண்டும் எனின் நேர்மறையாக (Positive) சிந்தித்து, கடைசி வரை பொறுமையாக இருந்து முயற்சித்தால், நிகழ்த்தப்பட்ட உலக சாதனையையே அதேநாளில் முறியடிக்க முடியும்!

Ifham Aslam
Visiting lecturer (OUSL)
BSc, MSc

அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். எமது வீட்டுக்கு அருகாமையில் ஒரு வீட்டுடன் இணைந்து சில்லறைக் கடை இருந்தது. அந்த வீட்டில் கேபிள் செனல் இருந்தது. எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் நாநாமார்…

அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். எமது வீட்டுக்கு அருகாமையில் ஒரு வீட்டுடன் இணைந்து சில்லறைக் கடை இருந்தது. அந்த வீட்டில் கேபிள் செனல் இருந்தது. எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் நாநாமார்…