இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 01

  • 14

இன்றைய தொழிநுட்ப உலகம் பல சாதனைகளை எமக்கு தந்தாலும், எமது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது என்பதே கவலைக்கிடமான விடயம். அவரவர் வெவ்வேறு போக்கில் சென்று குடும்ப உறவின் சங்கிலியை முறித்து வாழ்வதில் எங்கே அன்பு மலரும்? எவ்வாறு வீட்டை இலட்சிய குடும்பமாக மாற்றுவது?

பல கனவுகளுடன் திருமணம் முடிக்கிறோம். குடும்பத்திற்காக உழைக்கிறோம், கஷ்டப்படுகிறோம். ஆனால் இலட்சிய குடும்பமாக, நிம்மதியை தக்கவைக்கும் குடும்பமாக மாற்றுவதற்கு உழைப்பதில் கவனமின்மையே இன்று குடும்ப வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் காணாமல் போன ஒரு சொத்தாக இருக்கிறது.

இவ்வுலக வாழ்க்கையில் நிம்மதியின் இருப்பிடமாக இல்லங்கள் காணப்படுகிறது. ஆனால் அதை முறையாக பயன்படுத்தும் இல்லங்கள் எத்தனை என்பதிலே கேள்வி காணப்படுகிறது. பூமியில் நிம்மதியும் சந்தோஷமும் பெறு இடம் இல்லங்கள் என்கிறான் அல்லாஹ்.

“மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.”(16:80)

ஆனால் இன்று இதற்கு மாற்றமான சூழலே குடும்பத்தில் காணப்படுவதை நாம் பார்க்கிறோம். கணவன், மனைவி உறவில் விரிசல், பெற்றோர் பிள்ளை வளர்ப்பில் தோல்வி, சகோதர சகோதரிப் பாசம் இல்லாமை. போன்ற பல உறவுகளுக்கிடையிலான நெருக்கம் குறைந்து ஏனோ தானோ என்று கடமைக்கு வாழும் எத்தனையோ குடும்பங்கள் நம்மில் இல்லாமலில்லை.

மேற்கத்தைய கலாசாரம் இன்று எம் குடும்பத்திலும் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம். மணவிலக்குகள் அதிகரிப்பது ஏன்? கணவன் மனைவி உறவில் திருப்தியின்மை ஏற்படுவது ஏன்? பெற்றோர் பிள்ளைகள் உறவில் நெருக்கம் ஏற்படாமை ஏன்? சகோதர சகோதரிப் பாசம் அடியோடு இல்லாமல் போவது ஏன்? என்ற கேள்விக்கான விடைகளை அறிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையை அமைப்பதிலே நிம்மதியும், சந்தோஷமும் தங்கியுள்ளது.

இவ்வுலகத்தில் ஒரே குடும்பமாக காணப்படுபவர்கள் மறுமையிலும் ஒன்றாக வாழ கிடைப்பது அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றாக இருக்கிறது. என்றாலும் அந்த பாக்கியத்தை அடைய இல்லங்களை அதற்கான பயிற்சிப்பாசறையாக மாற்றுவதற்கு எத்தனை பேர் முயற்சிக்கிறார்கள்?

குடும்ப உறவு என்பது மிக முக்கியமானது. அது சீர்குலைந்தால் அந்த வாழ்க்கையில் எந்த அர்த்தமுமில்லை. எனவே நமது குடும்பம் உறவில் நிம்மதி, சந்தோஷத்தை பெற்ற இல்லங்களாக மாற்றுவதற்கான சில விடயங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும்
Faslan Hashim

இன்றைய தொழிநுட்ப உலகம் பல சாதனைகளை எமக்கு தந்தாலும், எமது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது என்பதே கவலைக்கிடமான விடயம். அவரவர் வெவ்வேறு போக்கில் சென்று குடும்ப உறவின் சங்கிலியை முறித்து வாழ்வதில் எங்கே…

இன்றைய தொழிநுட்ப உலகம் பல சாதனைகளை எமக்கு தந்தாலும், எமது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது என்பதே கவலைக்கிடமான விடயம். அவரவர் வெவ்வேறு போக்கில் சென்று குடும்ப உறவின் சங்கிலியை முறித்து வாழ்வதில் எங்கே…