இறைவனின் நாட்டத்திற்காக!

அன்பே!

நீ தான் என் உயிர்!
நீ தான் என் உடல்!
நீ தான் என் உள்ளம்!
தீ தான் என் உணர்வுகள்!

நீ தான் என் உண்மை!
நீ தான் என் பொய்!
நீ தான் என் ஜனனம்!
நீ தான் என் வாழ்வு!
நீ தான் என் சாவு!

நீ தான் என் தொடக்கம்!
நீ தான் என் முடிவு!
நீ தான் என் ஆதி!
நீ தான் என் அந்தம்!

நீ தான் என் கண்கள்!
நீ தான் என் பார்வை!

நீ தான் என் நாசி!
நீ தான் அதனுள்ளே
நுழையும் சுவாசம்!

நீ தான் என் உதடு!
நீ தான் அதனில்
இருந்து வரும் வார்த்தைகள்!
நீ தான் என் இதயம்!
நீ தான் அதில் பாயும் துடிப்பு!

நீ தான் என் நரம்பு!
நீ தான் அதனுள்ளே ஓடும் இரத்தம்!
நீ தான் என் கரங்கள்!
நீ தான் அதனுடைய செயற்பாடுகள்!

நீ தான் என் தொண்டை!
நீ தான் அதனுள்ளே
தாகம் தீர்க்க வரும் நீர்!

நீ தான் என் இரைப்பை!
நீ தான் அதனுள்ளே
பசிதீர்க்க தங்கும் உணவு!

நீ தான் என் கருவறை!
நீ தான் அதனுள்ளே கண்ணீருடன்
நான் சுமக்கும் குழந்தை!

நீ தான் என் கால்கள்!
நீ தான் அவை அறியா
தூரம் கொண்ட முடிவிலாப் பயணம்!

நீ தான் என் எண்ணம்!
நீ தான் என் கண்ணீர்!
நீ தான் என் சொற்கள்!
நீ தான் என் வார்த்தைகள்!

நீ தான் என் காகிதங்கள்!
நீ தான் என் தவறிய
எழுத்துப் பிழைகள்!

நீ தான் என் கடிகாரம்?
நீ தான் அதில் நகரும்
ஒவ்வொரு நிமிடங்களும்!

நீ தான் என் வருடங்கள்!
நீ தான் என் வருடங்களின் மாதங்கள்!
நீ தான் அதனுள் உள்ள கிழமைகள்!
நீ தான் என் வாரநாட்கள்!

நீ தான் என் பள்ளிக் கூடம்!
நீ தான் என் ஆசான்!
நீ தான் என் நண்பன்!
நீ தான் என் செல்ல எதிரி!
நீ தான் என் நெருங்கிய தோழமை!
நீ தான் என் ஒரே காதலன்!

நீ தான் என் வாலிபம்!
நீ தான் என் வாலிபன்!
நீ தான் என் குழந்தைத் தனம்!
நீ தான் என் குழந்தை!
நீ தான் என் தாலாட்டு!

நான் தான் உன் காதலால்
உறங்கவைக்கப்பட வேண்டிய
காதல் குழந்தை!

அன்பே!
எல்லாமாக நீ எனக்கு இருந்தும்!
என் பிரிவாகவும்
நீயே இருப்பாய் என
நான் கனவிலும் கூட
நினைக்கவில்லை!

என் ஏக்கமாக
நீ மாறுவாய் என
நினைக்கவில்லை!

என் கண்ணீராக
நீ உருவெடுப்பாய் என
எண்ணவில்லை!

என் நினைவுகள்
ஏங்கிக் கதறும்
ஒரு துயரமாவாய் என
நினைக்கவில்லை!

ஏன் உனக்கு
என்னைப் பிடிக்கவில்லை?
என் அழகு?
என் அந்தஸ்து?
என் வீடு, வாசல்?

என் பதவி?
என் படிப்பும்
நான் அறிந்த மொழிகளும்?
என்னால் நிம்மதியில்லையா?
என்னால் சந்தோஷம் இல்லையா?

என்னைப் போல் அழகிலும்
அந்தஸ்திலும் படிப்பிலும்
மொழியிலும் நிறத்திலும்
குறைவாய் உள்ளவளை
இணைத்துக் கொண்டால்
அவமானம் வரும் என அச்சமா?

இருக்கட்டும் பரவாயில்லை!
என் வாழ்வு இன்னும் முடியவில்லை!
காலம் இன்னும்
நீடித்துத்தான் செல்கிறது!

காத்திருப்பேன்
நான் கண்ணீருடன்
மெளனத்துடனும்!
இறைவனின் நாட்டத்திற்காக!

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka