விமர்சிப்பது எப்படி???

  • 22

இன்றைய உலகில் இஸ்லாமிய சமுதாயத்திலும் சரி இஸ்லாம் அல்லாத சமுதாயத்திலும் சரி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கத்துவத்தை இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம்.

இந்த இயக்கங்களில் ஆரம்ப கால கட்டம் எவ்வாறு காணப்பட்டது? அவை நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? அவற்றின் செயற்பாடுகள் எவை? என்ற பல வினாக்களுக்கு மத்தியில் சிறப்பான ஒரு வழிமுறையை கைக்கொண்டு இஸ்லாத்தை முன்வைத்தனர்.

இதன் ஆரம்ப ஆசான்களின் வழி முறைகளை மாற்றி யோசனை செய்து அதன் பின்னர் வந்த தலைவர்கள் அவர்களுடைய செயற்பாடுகளை மேற்கொண்டனர். காலம், இந்த அமைப்புகளின் தகவல் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு உட்பட்டவையா? அல்லது மாறுபட்டவையா? என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றன.

இந்த சந்தேகங்களுடன் இன்றைய உலக இயக்கத்தில்,இந்த அமைப்புகளின் வழிமுறை சரியானவையா? அல்லது பிழையானவையா? என்பதை நாம் அவதானிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பை விமர்சனம் செய்யும் விதமும், ஒரு குழு இன்னொரு குழுவை விமர்சனம் செய்யும் விதமும் ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரை விமர்சிக்கும் விதமும் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு உட்பட்ட விதத்தில் அமைந்தவையாக இருக்கிறதா? அல்லது அதற்கு மாற்றமாக அமைந்து இருக்கிறதா? என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

இஸ்லாம் ஒரு மனிதனின் எதை இன்னொரு மனிதனுக்கு ஹராம் என்று கூறியிருக்க, அதை நாம் தெட்டத்தெளிவாக சர்வ சாதாரணமாக நாம் விமர்சனம் என்று செய்து கொண்டு இருக்கிறோம்.

விமர்சனம் என்ற பெயரில் ஒரு மனிதனுடைய அந்தரங்க விடயங்களை வெளிக்கொண்டுவந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் நமக்கு காட்டி தந்த வழிமுறையா அல்லது அதற்க்கு மாற்றமான வழிமுறையா என்பதில் நாங்கள் கூடிய கரிசனை செய்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இஸ்லாம் எங்களுக்கு விமர்சனம் செய்வதற்காக வேண்டி பல வழிமுறைகளைக் காட்டித்தந்துள்ளது.

எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்ற விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ள அந்த வேளையில் நாங்கள் பிற் போக்கான விமர்சனங்களை கையாளுவது எமது அசமந்த போற்கினை எடுத்து காட்டுகின்றன.

எனவே அல்லாஹ்வும் ரசூலும் விமர்சனம் என்ற ரீதியிலே நாங்கள் எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்பதையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது அந்த வகையில் நாம் எமது விமர்சனங்களை தெரிவிக்க வேண்டும்.

அல்குர்ஆன் சுன்னா இரண்டிலும் அடுத்தவர்களுடைய மானத்திற்கு பங்கம் விளைவிக்காத வகையில் தமது விமர்சனங்களை ஆக்கிக் கொள்ளும் படி கூறியிருக்க .

அல்லாஹுத்தஆலா எங்கள் அனைவருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் எங்கள் விமர்சனங்களை ஆக்கி கொள்ள வழி வகுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

NAFEES NALEER
(IRFANI,SEUSL)
வியூகம் வெளியீட்டு மையம்

இன்றைய உலகில் இஸ்லாமிய சமுதாயத்திலும் சரி இஸ்லாம் அல்லாத சமுதாயத்திலும் சரி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கத்துவத்தை இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த இயக்கங்களில் ஆரம்ப கால கட்டம் எவ்வாறு…

இன்றைய உலகில் இஸ்லாமிய சமுதாயத்திலும் சரி இஸ்லாம் அல்லாத சமுதாயத்திலும் சரி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கத்துவத்தை இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த இயக்கங்களில் ஆரம்ப கால கட்டம் எவ்வாறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *