நியூற்றன் விதியும் பொலிஸ்காரனின் சதியும்

  • 13

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம்.

பொலீஸ் காரர் காலால் உதையாது, ஏன் குதித்துப் பாய்ந்தார்?

பொலிஸ் காரரின் நிறை (mg) கீழ்நோக்கித் தாக்குவதால் சமப்படுத்தப்படாத புறவிசை ஒன்று தாக்குகிறது.

எனவே, நியூட்டனின் விதிப்படி அவர் கீழ்நோக்கி ஆர்முடுகலுடன் இயங்கி, பெரிய வேகத்தில் கீழே இருப்பவரைத் தாக்குவார்.

எனவே பெரிய வயிறுடைய அவர் பெரிய உந்தத்துடன் கீழே இருப்பவரை அடிப்பதால்,

உந்தக்காப்பு விதிப்படி, பெரியதொரு அடி அவர் மீது விழும். சக்திக் காப்புத் தத்துவத்தின் படி பொலீஸ் காரரின் மிகப் பெரிய இயக்கசக்தியானது, கீழுள்ளவரின் மீள்தன்மையுள்ள விலா எலும்பில் பரிமாறப்படுவதால் விலா எலும்பு கீழ்நோக்கி விரைவாக நகர்ந்து நீளும்.

அவ்வாறு நீளும் போது, மீளியல் எல்லையைத் தாண்டினால் எலும்பு வளைந்து விடும். உடைவுப் புள்ளியை அடைந்தால், விலா எலும்பு நொறுங்கி விடும்.

எந்த விசயத்தையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்.

வேகமாக கீழிருப்பவர் மீது பாய்ந்த போலீஸ் காரர் ஏன் கீழே விழுந்தார்?

பொலிஸ் காரரின் சப்பாத்தின் அடி கீழிருப்பவர் மீது பட்டதும், அவர் திரும்புகிறார். எனவே, நிறை(mg) தாக்கும் கோடும் (தாக்கக் கோடு), நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கீழிருப்பவரால் வழங்கப்படும் சமனும் எதிருமான மறுதாக்கம் (R) தாக்கும் கோடும் ஒரே கோட்டில் அமையாமல் போகிறது.

(ஓர் விசையிணை உருவாகிறது)

பாரமான வயிற்றுப் பகுதியைத் தாங்க காலின் சப்போர்ட் இல்லாமல் போகிறது.

எனவே, அவரது உடலின் மேற்பகுதி நியூட்டனின் விதிப்படி புவியீர்ப்பின் கீழ் ஆர்முடுகி அவர் நிலத்தை அடிக்கிறார்.

அத்துடன் கீழிருப்பவரின்‌ உடலில் உள்ள தொடுபுள்ளி பற்றி விசைத்திருப்பம் காரணமாக சுழற்சி இயக்கத்தில் விழுவது குறிப்பிடத்தக்கது!

விதி செய்த சதி!

Ifham Aslam

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம். பொலீஸ் காரர் காலால் உதையாது, ஏன் குதித்துப் பாய்ந்தார்? பொலிஸ் காரரின்…

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம். பொலீஸ் காரர் காலால் உதையாது, ஏன் குதித்துப் பாய்ந்தார்? பொலிஸ் காரரின்…