ஈமானிய சுவை எது

  • 11

இதயத்தில் கறைபடிந்து போயிற்று
என் ஈமானில் கரும்புள்ளிகளாய்
பாவத்தின் கறைகள்
கரைகாணா தேசம் என
நிறை கண்டு போயிற்று
அதை உணர்ந்து எழுந்து
இறையிடம் அழுது தொழுது
என் பாவம் போக்க போராடும்போது
என் நண்பன் அங்கே
பாவத்தின் நடுவில்
ஓ என் உயிர் நண்பனே
உன் இதயத்தை எனக்காய்
ஒரு நிமிடம் ஒதுக்கு
ஊனமுற்ற உன் இதயத்தை
ஒழுங்காக திருத்தியமைக்க
உன் நிமிடத்தில் எனக்காய்
ஒரு நிமிடம் ஒதுக்கு
இறைவன் அளித்த
இறை மறை
இதயத்தில் நிறைந்திருக்க
இறைவன் வெறுத்த
இழி செயலில்
இன்னும் ஏன் தொடர்ந்திருக்கிறாய்
ஒருமுறை எண்ணிப்பார்
உன் கரம்வைத்து கேட்டுப்பார்
பாவம் செய்கையில்
உன் மனம் படபடத்ததை
ஒருமுறை நினைத்துப்பார்
பாவம் செய்தபின்
உன் மனம் கேவலத்தால் துவண்டதனை
ஒருதரம் மீட்டிப்பார்
என் நண்பனே
நீ நினைக்கும் வாழ்க்கை
நிலைத்ததல்ல
நீ இருக்கும் உலகம்
உன்னுடையதல்ல
நீ வசிக்கும் வீடு
உனக்கானதல்ல
நீ வாழும் உன் உயிர்
உனக்கு சொந்தமானதல்ல
உணர்ந்துகொள் நண்பனே
அதோ அந்த சூரியன்
ஒருநாள் சுருட்டப்படும்
அடுத்து அது மறைய
உதிர்த்து எழும் நட்சத்திரம்
ஒருநாள் உதிர்ந்து விழும்
உன் உயிர் பறிக்கப்படும்
உன் உடலின் ஒவ்வொரு பகுதியும்
பேசவைக்கப்படும்
அன்று அவை உனக்கு எதிராக
பேசும்போது உன்னால்
ஒரு அணுவளவும்
அதிலிருந்து அதை
தடுத்துவிட முடியாது
நண்பனே நீ மாறிவிடு
உன் இறைவனிடம் நீ
மீண்டுவிடு
அவன் மன்னிப்பாளன்
அவன் அருள் வானம் பூமி
அத்தனையையும் விஞ்சிவிடும்
நண்பனே உன் நாட்கள் குறைவானவை
உன் பாவங்கள் அதிகமானவை
நீ பற்றவைத்த தீ
அதில் நீ விழுமுன்
அதை தௌபாவால் அணைத்துவிடு

நன்றியுடன் நான் கவிஞன்

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இதயத்தில் கறைபடிந்து போயிற்று என் ஈமானில் கரும்புள்ளிகளாய் பாவத்தின் கறைகள் கரைகாணா தேசம் என நிறை கண்டு போயிற்று அதை உணர்ந்து எழுந்து இறையிடம் அழுது தொழுது என் பாவம் போக்க போராடும்போது என்…

இதயத்தில் கறைபடிந்து போயிற்று என் ஈமானில் கரும்புள்ளிகளாய் பாவத்தின் கறைகள் கரைகாணா தேசம் என நிறை கண்டு போயிற்று அதை உணர்ந்து எழுந்து இறையிடம் அழுது தொழுது என் பாவம் போக்க போராடும்போது என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *