வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ரமழானே!

  • 1

ஷஹ்பானிற்கு விடை கொடுப்போம்
ரமழானை வரவேற்போம்

ரமழானில் நோன்பிருப்போம்
ஐவேளை தொழுதிடுவோம்
குர்ஆனை ஓதிடுவோம்
நற்பயனை அடைந்திடுவோம்
நன்மைகள் பல செய்திடுவோம்
தானதர்மங்களும் கொடுத்திடுவோம்
கறைபடிந்த மனதினை
நன்மைகளால் தூய்மையாக்கிடுவோம்!

இல்லையெனச் சொல்லாது
இருப்பதைக் கொடுத்திடுவோம்
பசியென்றால் என்னவென்று
பாடத்தை படித்திடுவோம்
பசியாற உணவு
பகிர்ந்தெங்கும் கொடுத்திடுவோம்

எமை படைத்த இறைவா
உனை மட்டும் கதியாய்
உன் நினைவோடு நோன்பை
நிறைவோடு முடித்திட
அனைவருக்கும் அருள் புரிந்திடுவாய்!

உருவில்லா இறைவா
உளமார உருகி
உன் நிழல் தேடும் எம்மை
அன்போடு அணைத்து
ஆனந்தப்படுத்திடு!

கொடுஞ்செயல்கள் கண்டு
மனமெல்லாம் நொந்து
மன்றாடி உன் முன்
யாசித்துக் கிடக்கும்
உயிரெல்லாம் காத்து
குறைபட்ட உலகை
நிறைவோடு மாற்றிடு!

தர்கா மண்ணின் இளம் தாரகை
ஷஹ்னா ஸப்வான்

ஷஹ்பானிற்கு விடை கொடுப்போம் ரமழானை வரவேற்போம் ரமழானில் நோன்பிருப்போம் ஐவேளை தொழுதிடுவோம் குர்ஆனை ஓதிடுவோம் நற்பயனை அடைந்திடுவோம் நன்மைகள் பல செய்திடுவோம் தானதர்மங்களும் கொடுத்திடுவோம் கறைபடிந்த மனதினை நன்மைகளால் தூய்மையாக்கிடுவோம்! இல்லையெனச் சொல்லாது இருப்பதைக்…

%d bloggers like this: