முகத்திரை ஓர் உரிமை

  • 12

திரை முகத்திற்கா??? பார்வைக்கா???

என்ற தலைப்பில் பெண்கள் முகத்திரை அணிய தேவையில்லை. என்ற கருத்தில் அமைந்த தனது கட்டுரையை வாசித்த சகோதரர்கள் தனது கருத்து தவறானது என்று விமர்சித்து தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அவர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பே இன்றைய கட்டுரையாகும்.

புஹாரி கிரந்தம் ஊடாக எவ்வாறு முகத்திரை அணிய தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்க முடியுமோ அவ்வாறே முகத்திரை அணிய முடியும் என்பதற்கான ஆதரங்களையும் முன்வைக்கலாம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று ஒருவர் எழுந்துகேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி 1838)

மேலுள்ள ஹதீஸில் பெண்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது முகத்திரை அணியக்கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏனைய சந்தர்பங்களில் முகத்திரை அணிய முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.

முகத்திரை அணிந்த பெண்கள் கல்வித்துறையில் முன்னேறக் கூடாது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற ஓர் மனப்பாங்கு இன்றைய முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது.

புஹாரியில் உள்ள சில ஹதீஸ்களை அவதானிக்கையில் சாதாரண பெண்களை விட முகத்திரை அணிய வேண்டும் என உம்மஹாத்துல் முஃமினீன்கள் மீது வலியுறுத்திக் கூறியுள்ளதை அவதானிக்கலாம்.

அவ்வகையில் ஆயிஷா நாயகியும் உம்மஹாத்துல் முஃமினீன்களில் ஒருவராகும். இஸ்லாமிய அறிவியல் துறையாக உள்ள ஹதீஸ் துறையில் அதிக ஹதீஸ்களை அறிவித்த பெண்களில் முதாவது பெண்மணியும் இவராகும், ஆயிஷா நாயகி அன்று முகத்திரை அணிந்துள்ளேன் என்று வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை மாறாக அன்றைய காலத்தில் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைத்து இஸ்லாமிய அறிவியல் துறைக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளார்கள். எனவே இன்றுள்ள பெண்களும் முகத்திரை அணிந்துள்ளேன் என்று வீட்டில் முடங்கிக் கிடக்க தேவையில்லை, மாறாக சமூகத்திற்கு அவர்களால் சேவையாற்ற முடியும்.

இன்று சமூகத்தில் முகத்திரை அணிந்த வண்ணம் பல சமூக சீர்கேடுகளை செய்கின்றனர். எனவே முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய வேண்டியதில்லை என்ற கருத்தை முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருசிலர் முன்வைக்கின்றனர். இது தவறான ஓர் வாதமாகும் மோட்டார் சைக்கிளில் (motor bike) செல்வோரின் பாதுகாப்புக்காக பாதுக்காப்புக் கவசம் (helmet) அணிவது போன்று முஸ்லிம் பெண்களை தமது பாதுகாப்புக்காக முகத்திரை அணிகின்றனர்.

இன்று சமூகத்தில் பாதுக்காப்புக் கவசம் (helmet) அணிந்த வண்ணம் ஒரு சிலர் கொள்ளைகளில் ஈடுபடுகின்றார். அதற்காக நாம் மோட்டார் சைக்கிளில் (motor bike) செல்வோருக்கு பாதுக்காப்புக் கவசம் (helmet) அணிய வேண்டாம் என்று தடைவிதிப்பதில்லை. அவ்வாறே முகத்திரை அணிந்த வண்ணம் சமூக சீர்கேடுகளை முஸ்லிம் அல்லாதோரும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் செய்கின்ற தவறுக்காக முஃமினீனான பெண்களை நோக்கி முகத்திரை அணிய வேண்டாம் என்பது தவறாகும்.

இறுதியாக ஹதீஸ்களை அவதானிக்கையில் முகத்திரை அணியலாம், அணியக்கூடாது என்ற இரு கருத்திற்கும் ஆதரவான ஹதீஸ்களை முன்வைக்கலாம். அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் உரிமையாகும்.

Ibnuasad

திரை முகத்திற்கா??? பார்வைக்கா??? என்ற தலைப்பில் பெண்கள் முகத்திரை அணிய தேவையில்லை. என்ற கருத்தில் அமைந்த தனது கட்டுரையை வாசித்த சகோதரர்கள் தனது கருத்து தவறானது என்று விமர்சித்து தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அவர்கள்…

திரை முகத்திற்கா??? பார்வைக்கா??? என்ற தலைப்பில் பெண்கள் முகத்திரை அணிய தேவையில்லை. என்ற கருத்தில் அமைந்த தனது கட்டுரையை வாசித்த சகோதரர்கள் தனது கருத்து தவறானது என்று விமர்சித்து தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *