ஏப்ரல் 21

  • 11

இயற்கை எழில் உடன்
நாற்பக்கமும் உவர் நீர்
ஊற்றெடுக்க
இன மத பேதமின்றி
இணைந்து இருந்த
அந்நேரம்

அழகாய் விடிந்தது
ஏப்ரல் 21
அதிகாலை
அவலத்துடன் முடிந்தது
அன்றைய மாலை

பயங்கரவாதிகள் என்ற
பட்டம் பெற்று
பட்டப்பகலில் பதற
வைத்தனர் இறை
சந்னிதானத்தில்

உயிர்த்த ஞாயிறு
உயிர்களை உருகுலைத்தது
உணர்வுகள் அற்ற
ஒரு சிலரால்

உவப்பாய் ஊர் சுற்ற
வந்த உல்லாசப் பயணிகளின்
உயிர் அற்ற
உடல்கள் உணவகத்திலே

உயிர்த்த ஞாயிறை
உயர்பிக்க வந்த
உறவுகள்
உயிர் அற்று கிடந்தன
தேவாலயங்களிலே

கொள்கைவாதிகளின் கொடூரம்
குற்றம் சுமத்தப்பட்டது
நடுநிலைமை சமூகம்
தலைகுனிந்து நிற்கிறது
நாதியற்று
வில்லங்கமான
காடையரின் கல்வீச்சில்

ஈராண்டு கடந்து போனது
கிடைக்குமா நீதி
நிலைக்குமா சமூகம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம்…

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம்…