இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 03

  • 6

இறைவனுடன் இரு இதயங்களின் இணைவு

கணவன் மனைவி உறவில் அன்பு, நெருக்கம், புரிந்துணர்வுடன் வாழும்போது நிம்மதி, சந்தோஷம் குடிகொள்ளும் என்ற விடயத்தை சென்ற தொடரில் பார்த்தோம். என்றாலும் இந்த நெருக்கத்தோடு இறைவனுடன் நெருக்கம், அவனின் திருப்திக்காக செயற்பட்டு இலட்சியக் குடும்பமாக மாறும் போதே இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஈருலகிலும் வெற்றி பெறும் தம்பதிகளாகத் திகழ்வோம்.

எனவே இறைவனுக்காக வாழும் துணைவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ்.

குடும்ப வாழ்க்கை என்று வரும்போது, பணம், பதவி, தொழில் போன்ற தேவைகள் வரும் அதேபோல் குழந்தைகள் என்று குடும்பம் விரிவடையும் எதுவாக இருந்தாலும் இவை அனைத்தும் இறைப் பொருத்தத்தை பெற்றுத்தரக்கூடியதாக அமைய வேண்டும்.

‘திருமணம் முடித்து கணவன் மனைவி இல்லறத்தை அனுபவிக்கலாம் மனைவி பிள்ளைகளுடன் வாழ்க்கையை ரசிக்கலாம். அதேபோல் இறைவனுக்காக வாழும், வணங்கும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். குடும்பமாக சேர்ந்து தொழுதல், ஏனைய அமல்கள் செய்தல் குறிப்பாக தற்போது ரமழான் மாதம் என்பதால் இன்னும் இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தலாம் அதேபோல் பிள்ளைகளையும் அதற்காக பயிற்றுவித்தல். இல்லாவிடின் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடும்.

‘மேலும் அறிவை, மார்க்க விடயங்களை அறிந்த, புரிந்து கொண்ட துணைவர்களாக இருத்தல் அதன் மூலம் இறைவனுக்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் மனித சமூகத்திற்கு எவ்வகையிலாவது பயனாற்ற வேண்டும்.

அது இல்லாமல் எத்தனை கண்டுபிடிப்புக்கள், புகழ் பெற்றாலும் அல்லாஹ்விடத்தில் எந்தப்பெறுமானமும் இல்லை.

‘சொத்து ,செல்வங்கள் சம்பாதித்து வசதிவாய்ப்புக்களுடன் வாழலாம் அதேபோல் தேவைப்படுவோருக்கு உதவி செய்யும், ஸதகா, ஸகாத் கொடுக்கும் கொடைவள்ளலுள்ள துணைவர்களாக இறைவனுக்காக செயற்படல் அவசியம்.

படிப்பினைக்காக ஒரு வரலாற்று நிகழ்வொன்றை பதிவிடுகிறேன்.

இஸ்லாமிய வரலாற்றில் 5 வது கலீபாவாக போற்றப்படும் மேதை உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் குடும்ப வாழ்க்கையை இலட்சிய குடும்பமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட முறையை அறியலாம் அதாவது திருமணத்திற்கு முன்பே அதற்கான தயார்ப்படுத்தல்.

எனவே உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் வீட்டை இஸ்லாமிய வீடாக மாற்ற சிறந்த துணை வேண்டும் என்பதால் கலீபா அப்துல் மலிகின் மகள் பாத்திமாவை திருமணம் முடித்தார். இந்தப் பெண் யாரெனில் நாமெல்லாம் அறிந்த சம்பவம் அதாவது பாலில் நீரை கலக்குமாறு தாய் கூற கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு தெரிந்தால் என்னவாகும்!”

“தாய் உமர் தான் இங்கு இல்லையே எனக்கூற உமர் இல்லாவிடினும் மேலே இருப்பவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சம்பவம் நாமெல்லாம் அறிந்திருப்போம். அந்த தக்வாவை கொண்ட பெண்ணின் மகள் தான் இந்த பாத்திமா.

பின் மதீனா ஆளுனர் அதன் பின் நீதிமிக்க கலீஃபா இறுதி என் மனம் சுவனத்தை விரும்புகிறது நிச்சயமாக நான் போவேன். இது தான் என் இலட்சியம் என்றார் அதேபோல் நடந்த வரலாற்று சம்பவத்தை அறிந்திருக்கிறோம்.

இதுதான் உண்மையான வாழ்க்கை இவ்வுலகிலும் வெற்றி மறுஉலகிலும் வெற்றியடையலாம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்.
Faslan Hashim

இறைவனுடன் இரு இதயங்களின் இணைவு கணவன் மனைவி உறவில் அன்பு, நெருக்கம், புரிந்துணர்வுடன் வாழும்போது நிம்மதி, சந்தோஷம் குடிகொள்ளும் என்ற விடயத்தை சென்ற தொடரில் பார்த்தோம். என்றாலும் இந்த நெருக்கத்தோடு இறைவனுடன் நெருக்கம், அவனின்…

இறைவனுடன் இரு இதயங்களின் இணைவு கணவன் மனைவி உறவில் அன்பு, நெருக்கம், புரிந்துணர்வுடன் வாழும்போது நிம்மதி, சந்தோஷம் குடிகொள்ளும் என்ற விடயத்தை சென்ற தொடரில் பார்த்தோம். என்றாலும் இந்த நெருக்கத்தோடு இறைவனுடன் நெருக்கம், அவனின்…