சகோதரியே கலங்காதே!

  • 11

ஹிஜாப் அணியும்
அன்புச் சகோதரி!
கலங்காதே!
நிராசை அடையாதே!

எஞ்சி இருக்கும் றமழானின்
இரவின் பிந்திய பகுதியில்
விழித்தெழு! – அது
“என்னிடம் கேட்பவர்கள்
யாரும் இல்லையா?” – என
நம்மைப் படைத்தவன்
நம்மை அழைக்கும் நேரம்

அவனை அழை!
அவனோடு பேசு!
மனம்திறந்து பேசு!
கண்ணீர் விட்டு மன்றாடு!

அவன் ஆற்றல் மிக்கவன்
நொண்டிக் கொசுவின் மூலம்
அரசன் நும்ரூதைச் சாகடித்தவன்

அபாபீல்கள் மூலம்
ஆப்றாஹாவின்
படையையே அழித்தொளித்தவன்.

உன் ஹிஜாபுக்காய்
அவனிடம் மனுக்கொடு!

இர்ஷாத் மூமீன்

ஹிஜாப் அணியும் அன்புச் சகோதரி! கலங்காதே! நிராசை அடையாதே! எஞ்சி இருக்கும் றமழானின் இரவின் பிந்திய பகுதியில் விழித்தெழு! – அது “என்னிடம் கேட்பவர்கள் யாரும் இல்லையா?” – என நம்மைப் படைத்தவன் நம்மை…

ஹிஜாப் அணியும் அன்புச் சகோதரி! கலங்காதே! நிராசை அடையாதே! எஞ்சி இருக்கும் றமழானின் இரவின் பிந்திய பகுதியில் விழித்தெழு! – அது “என்னிடம் கேட்பவர்கள் யாரும் இல்லையா?” – என நம்மைப் படைத்தவன் நம்மை…