சொல்லு சொல்லாக

  • 15

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று
மதிப்புக்குரிய நிறுவனமொன்றால்
இலவசமாக நடந்தேறியது அன்று

இடைக்கிடை போய் பார்த்தேன்
அழகிய அர்த்தமுள்ள
உரைகள் அரங்கேறியது

உணவில் விஷமாம்
உடலுக்கு ஆபத்தாம்
அடியோடு தடுத்து
தோட்டங்கள் செய்வோமென்ற
தொனிப் பொருளில்
மூழ்கியிருந்தனர்
தோட்டப் பாடசாலைக்கு
வந்த தொண்டர்கள்

கடையிலே வேண்டாம்
கருப்பட்டிகூட
கைபட உழைத்து
சாப்பிடாதவிடத்து
கலக்கும் நஞ்சு உடம்பில்
கடுமையாய் சொன்னார்கள்

கவனித்தனர் குழந்தைகள்
கவனம் குவிந்தது என்னில்
கவனிக்கவென டீ ஊற்ற முனைந்த
கல்வித்தாகம் தீர்க்கும் சகஆசான்களிடமே

டீ வேண்டாம் மாவு கூடாதாம்
டீச்சர் நிறுத்திடுங்க
தண்ணீர் மட்டும் தான் குடிப்பார்கள்
தடுமாறிப் பிரயோசனமில்லை
தடுமாற்றமின்றி சொன்னேன்
தெளிவாக உறுதியோடு

“சொல்லு சொல்லாக”
சுவைப்பார்கள் ஊற்றிடுங்கள்
சுலமாக சொன்னார் அதிபர்
ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்
வேண்டாமென்று வெட்டிப்பேசிய
ஈஸ்ட் போட்ட பனிஸைக்கூட
விட்டுவைக்காமல்
அங்கேயே அப்படியே
உரையை முடித்துக் கொண்டே

சொல்லு சொல்லாக
காற்றிலே பறந்து போனது
என் மனம் மனித இனத்தை
எண்ணி நொந்து போனது

Binth Ameen

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று மதிப்புக்குரிய நிறுவனமொன்றால் இலவசமாக நடந்தேறியது அன்று இடைக்கிடை போய் பார்த்தேன் அழகிய அர்த்தமுள்ள உரைகள் அரங்கேறியது உணவில் விஷமாம் உடலுக்கு ஆபத்தாம் அடியோடு தடுத்து தோட்டங்கள் செய்வோமென்ற தொனிப் பொருளில் மூழ்கியிருந்தனர்…