கைதியா நீ இன்று

வானம் கறுக்கயிலே
குஞ்சுகளைப் காவல்காக்கும்
பட்சியை போல்
ஓலைக் குடிசையிலே
உண்பதற்கு ஏதுமின்றி
உறக்கம் கெட்டுக் கிடந்த
எம் ஏழைத் தாய்மார்கள்
ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு
இறைவன் தந்த
எம் இனிய மகனே

உன் வெற்றி நடைக்கு
ஆயிரம் தடைகள் வந்த போதிலும்
உனக்கு உதவியாய்
இருந்த ஓர் ஆயுதம்
உன் ஏழை தாய்மார்கள்
உனக்காய் வடித்த
கண்ணீர் துளிகளே
இன்று அக் கண்ணீர் துளிகளோ
உன் நிலை கண்டு வீதியிலே
உலா வருவதென்ன
நமக்கான சோதனனையா?

தலைவா உனக்காக
உன் இறைவனிடம்
நீ கை ஏந்தும் மாதமிது
இன்றோ உன்னை
சிறைப்படுத்தியதால்
இலட்சாதி லட்சம் மக்கள்
உனக்காக இறைவனிடம்
கையேந்தி நிற்பதென்ன சாதனையா

கலங்காதே எம் தலைவா
பத்ர் யுத்தம் வெற்றி கொண்ட மாதமிது
அநியாயம் செய்ய நினைக்கும்
அக்கிரமக்காரர்கள்
அழிந்து போகும் மாதமும் இதே
அழியட்டும் கயவர்கள்
எம் அனைவரதும் கண்ணீரால்

காலங்கள் மாறி வரும்
எம் கண்ணீரும்
ஆறும் காலம் வரும்
அன்று உன்னை வீழ்த்த நினைக்கும்
உன் எதிரிகள் கூட
உன்னிடத்தில்
கையேந்தும் காலம் வரும்

பல மக்கள் வாழ்வில்
ஒளி ஏற்றிய எம் தலைவனே
உன்னால் எத்தனை குடும்பங்கள்
இன்று நிம்மதிப் பெறும் மூச்சு விடுகிறது
என்பதை மூடி மறைக்க முடியாது

உன்னாலே முகவரியற்று கிடந்த
வன்னி மண் இன்று
முகவரி பெற்று முழுமை அடைந்து
முழு நிலாவாக ஜொலிக்கிறது

நீ எண்ணி விட்டாயா
நாம் வீழ்ந்து விட்டோமென
நீ வீழ்ந்தாலும் நீ செய்த சேவைகள்
ஒரு போதும் வீழ்ந்ததில்லை
இனி நாம் வீழப்போவதுமில்லை

நான் நினைத்து பார்க்கிறேன்
உன் அரசியல் பயணமதை
மிகக் குறுகிய காலத்திற்குள் எம்பி ஆனாய்
பின் அமைச்சரானாய்
இன்னும் மக்கள் போற்றும்
அரசியல் கட்சியின் தலைவனாய் இன்று
எம் அனைவரையும் ஈர்த்துக் கொண்ட
மாமனிதனானாய் உன்னை அன்றி வேறு
யாரால் முடியும் இத்தனையும்

என் தலைவன் வெற்றி நடை போடும் போது
தலைவனுடன் இருந்த சுயநலமுள்ள
ஊலையிடும் நரிக்கூட்டங்களே
நினைவில் கொள்ளுங்கள்
நாளை உங்களுக்கும்
இந்நிலை வரலாம் அன்றும்
எம் தலைவனே உனக்காய்
குரல் கொடுப்பார் என்பதை
மறந்து நடவாதீர்கள்

உலகில் புகழ் பெற்ற
பெறும் தலைவர்களுக்கு
சிறை வாசம் ஒன்றும்
புதிதல்ல தலைவா
கலங்காதிரு
கசக்கப்பட்ட காளான்கள்
நாம் இன்று
மீண்டும் நாளை
மழையில் புத்தெழுச்சி பெறலாம்

உன்னால் எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியும்
உன் சமூகத்தின் விடிவென்பதை
உன் கயவர்கள் மறந்து விட்டனர் போல

நீ மறவாதே தலைவா
கஷ்டத்தின் பின்னே இலேசுல்லது
எம் கடின உழைப்பின் பின்னே பலனுள்ளது
நாளை எமக்காய் ஒரு விடிவு வரும்
அன்று நீயே எம் மனங்களில்
முடி சூடா மன்னனாவாய்
பொறுமை கொள் எம் தலைவனே பொறுமையாளர்களுடன்
இறைவன் இருக்கிறான்
என்பதை மறவாது

கரம்பையூரான் கரீஸ்

வானம் கறுக்கயிலே குஞ்சுகளைப் காவல்காக்கும் பட்சியை போல் ஓலைக் குடிசையிலே உண்பதற்கு ஏதுமின்றி உறக்கம் கெட்டுக் கிடந்த எம் ஏழைத் தாய்மார்கள் ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு இறைவன் தந்த எம் இனிய மகனே உன்…

வானம் கறுக்கயிலே குஞ்சுகளைப் காவல்காக்கும் பட்சியை போல் ஓலைக் குடிசையிலே உண்பதற்கு ஏதுமின்றி உறக்கம் கெட்டுக் கிடந்த எம் ஏழைத் தாய்மார்கள் ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு இறைவன் தந்த எம் இனிய மகனே உன்…