பலஸ்தீன் பலம் பெற

  • 97

உலக மேடையில்
உதாசீனமாய்
உதரப்பட்டுள்ள
உன்னத தேசம்

அதிகாரம் எனும்
அகழியில்
அடக்கப்பட்டுள்ளன
அப்பாவி உயிர்கள்

பள்ளி சென்று
பாடம் படிக்க வேண்டிய
பாலகர்கள் பாதைகளில்
இரத்தம் சிந்துகின்றனர்
சொந்த மண்ணுக்காக

இம்மையின் இன்பங்களை
துறந்து
இறைப்பாதையில்
இயங்குகின்றனர் இளைஞர்கள்

ஓய்வான காலத்தில்
ஓடித்திரிகின்றனர்
முதியோர்கள்

அழுகுரலும் ஓலங்களும்
ஒப்பாரிகளும்
ஒன்றித்து விட்டன
ஒளிமயமான தேசமதிலே

இன்று பிறந்து
நாளை மரணிக்கும்
மண்ணாய் மாறிவிட்டது
மகத்தான தேசம்

சொந்த மண்ணிலே
சோதிக்கப்படுகின்றனர்
சொர்க்கத்து சொந்தங்கள்

வந்தாரை
வரவேற்றதற்காக
இருந்தோரை
இழந்து கொண்டிருக்கிறது
ஈமானிய தேசம்

நாடோடிகள்
நாட்டை ஆள
அடிமைகள் ஆனது
ஆன்மீக தேசம்.

எத்தனை
இன்னல்களை
கடந்தாலும்
ஈமான் எனும்
ஆயுதம் ஏந்தி
அத்தனையையும்
எதிர்க்கும்
உள்ளங்கள் அங்கே

வீறுகொண்டு எழுந்து
வெற்றி நடைபோடும்
வெண்மையான நாட்கள்
அருகிலேயே

இருகரம் ஏந்துவோம்
படைத்தவனிடம்
பலஸ்தீனம் பலம் பெற!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

உலக மேடையில் உதாசீனமாய் உதரப்பட்டுள்ள உன்னத தேசம் அதிகாரம் எனும் அகழியில் அடக்கப்பட்டுள்ளன அப்பாவி உயிர்கள் பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பாலகர்கள் பாதைகளில் இரத்தம் சிந்துகின்றனர் சொந்த மண்ணுக்காக இம்மையின் இன்பங்களை…