துயில் தொலைக்கும் விழிகள்

  • 13

துயில் தொலைத்த இரவுகள்
துக்கம் தொக்கியவை
தூங்கிப் போன கவலைகளை
துடைத்து எழுப்பாட்டிவிடும்

பல்லியின் சத்தம்
பாம்பின் சத்தமாக
படபடக்கும் நெஞ்சை
பாடம் போட்டுக் காட்ட வல்லவை

ஏக்கங்கள் விகாரமடைந்து
ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி
எங்கோ கேட்கும் ஒலியொன்று
எம் காதில்தான் ரீங்காரமிடும்

மரண பயமொன்று ஒட்டிக்கொள்ள
மனதில் வடுக்கள் சுட்டுக் கொல்ல
மனதோ இழப்பின் உச்சத்தில்
மலையேறிவிடும்

கொக்கொரக்கோ சத்தத்தில்
காலை விடியலை பார்த்துவிட்டு
குப்புறப்படுக்காமல் இனியேனும்
கண்விழித்தாக வேண்டும்
காரிருள் இரவில்
கவனமாய் எடுத்தேன் முடிவு
கவலைகளை கலைத்துப்போட

இன்னும் கொஞ்சம் தூங்குவோம்
இதமாய் இருக்கின்றது
மீண்டும் மீண்டும்
அதே சங்குதான்
என்னை ஆட்கொள்ளப்போகிறது

Binth Ameen
Tr

துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ…