நில்வள கரையோர பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

admin

நில்வள நதிக்கரைக்குற்பட்ட தாழ்ந்த பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிள்வள  நதிக்கரையோரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கிடைக்கப்பெற்ற வெள்ள நீர் மட்ட அளவுகளின் அடிப்படையில் நீர் மட்ட அளவு அதிகரித்துச் செல்வதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன இதனாலே வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பானந்துகம ஆற்றுப்பள்ளதாக்கு பகுதியில் இன்று மாலை ஐந்து மணியளவில் நீர் மட்டம் 5.82 மீற்றர் பதிவாகியுள்ளது. அப்பகுதியில்  நீர் மட்டம் 6 மீற்றர் சிறிய வெள்ளம் என்பதுடன், 7:50 மீற்றர் பாரிய வெள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (13.05.2021) பிற்பகல் வேளையில் நதிக்கரையோரப் பிரதேசங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான அளவு மழைவீழ்ச்சி காணப்பட்டதோடு இரவு வேளையில் தென்மேற்கு குறிப்பாக தெற்கு, மேல், சப்பிரகமுவ, வடமத்தி மத்திய மாகாணங்களில் மழையுடனான கால நிலை மேலும் நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் இரவு வேளையில் 200 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பிடபந்தர, அகுறஸ்ஸ, கந்துவ, கம்புறுபிடிய, திஹகொட, அதுரலிய பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அகுரஸ்ஸ கம்புறுபிடிய, மற்றும் அகுறஸ்ஸ சியம்பலாங்கொடை வீதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் அவதானமாக தெயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Open chat
Need Help