ஷவ்வால் கீற்றிலே

admin

மூ பத்துக்களை
முத்தாய்ப்பாய் – சுமந்து
மானிடர் கறையகற்ற வந்த
மகத்தான மாதமே!

இருமதிக்கிடையில்
முழு மதியாய் – உதித்து
பாவங்களை சுட்டெரித்து
நன்மைகளை சம்பாதித்து

மனிதனை புனிதனாக்கி
மறையை ஏந்தவைத்து
மறுமையில் ஏற்றம் பெற
மாந்தர் நலம் பெற

நவ திங்களாய்
வந்துதித்த ரமழானே – நீ
விடைபெறும் தருணமதில்
வல்லோனளித்த பரிசு

ஷவ்வால் கீற்றிலே
ஈகைத் திருநாளாம்
இன்பப் பெருநாளை
உவகையுடன் வரவேற்றிடுவோம்!

ஈத் முபாரக்

ASMA MASAHIM
PANADURA
SEUSL
Open chat
Need Help