விடை பெறும் ரமழானே ஈத் முபாரக்

  • 33

ரமாழன் வசந்தம் கழிகிறதே!
இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே!
ஏழைகளின் வயிற்றுப் பசியை
உணர்த்திட வந்த ரமழானே!
இன்றுடன் எங்களை ஏக்கத்துடன்
விட்டுச் செல்வதும் ஏனோ!

ரஹ்மத்துடைய பத்து
மஹ்பிரத்துடைய பத்து
நரகவிடுதலையுடைய பத்து
என முப்பத்தாய் முத்து முத்தாய்
எமக்கு நன்மைகளை
அள்ளித் தர வந்த ரமழானே!

இன்றுடன் எமது அமல்களை
ஏற்க மறுத்து
விடை பெறுவதும் ஏனோ!

நீ பண்படுத்தி விட்டாய் எங்கள்
அனைவரினதும் உள்ளங்களை!
இனி மீண்டும் அடுத்த ஆண்டும்
முஹமன் செய்து
கொள்ள வருவாயா எங்களை!

ஏதோ எங்களால் முடியுமான
அமல்களை செய்து கொண்டோம்
நீ பிழைபொறுக்கச் சொல்வாய்
அல்லாஹ்விடம் எங்கள் பாவங்களுக்காய்!

ஏதோ போதாத காலம் இன்றுடன்
உன்னை நாம் பிரிகிறோம்!
மீண்டும் எங்கள் அனைவரினதும்
உள்ளங்களை அபிவிருத்தி செய்து
விட வந்து விட வேண்டும்!

எம்மிடமிருந்து விடைபெறும் ரமழானே!
அங்கே அல்லலுறும் எமது
இரத்த உறவுகளான
பாலஸ்தீனியருக்கு சுதந்திரம் தனை
இனிய ஈத்முபாரக்கில் அளித்துச் செல்ல
அருள் புரிந்திடுவாய்!

உபவாசத் திருநாளை
உவகையுடன் வரவேற்ற படியே!
உன்னிடம் இருந்து உள்ளம் கனிந்து விடைபெறுகிறேன்!

நாளை ஏழைகளின் திருநாள்!
ஈதுல் பித்தர் பெருநாள்!
அனைவருக்கும் அல்லாஹ்வின்
அருள் பொழிந்திட வேண்டும்!
அனைத்துலக விட்டும்
கொடிய கொரோனா
விடை பெற வேண்டும்!

பிரார்த்தனையுடன்
விடை பெறுகிறேன்!
விடைபெறும் ரமழானே
உனக்கும் ஈத் முபாரக்!
ஈத் முபாரக் சொல்வோம்
சமூக இடைவெளி பேண்வோம்!
அனைத்து ஈமானிய உள்ளங்களுக்கும்

தகப்பல் அல்லாஹ் மின்னா வமின்கும்

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic language
South Eastern University of Sri Lanka

ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து…

ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து…