எதிரியாகும் எதிர்மறை எண்ணங்கள்.

  • 13

வருடம் 1980 நாடு அமெரிக்கா. சென்ட் லெண்டி என்பவருக்கு தொண்டையில் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. மருத்துவரை நாடிப் போகிறார். லெண்டியைப் பரிசோதித்த மருத்துவர் லெண்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். இது மூன்றாம் நிலைப் புற்று நோய் என்றும் இதற்கு எவ்விதமான மருந்துகளும் இல்லை என்றும் கூறுகிறார். விருப்பமான உணவுகளை உண்டு நேசத்திற்குரியவர்களை சந்தித்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையை வாழச்சொல்கிறார்.

எதிர்பாராத இந்நிகழ்வு லெண்டியை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. லெண்டியை துயரம் பற்றிக்கொள்கின்றது. தனது மனைவியைக் காணும் பொழுதெல்லாம் அழுகை வந்து விடுகிறது. தனது இறப்புக்குப் பின் இவளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற துக்கம் வாட்டி வதைக்கிறது. மருத்துவரிடம் சென்று வந்த 14 ம் நாள் லெண்டி மரணித்து விடுகிறார்.

லெண்டியின் உடலை பிரேதபரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. காரணம் லெண்டியின் உடலில் புற்றுநோய்க்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை. அப்படியாயின் லெண்டி ஏன் இறந்தார் மருத்துவர்களின் ஆராய்ச்சி தொடங்கியது பல வருடங்கள் பல நபர்களைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் பின் அவர்கள் ஒரு தகவலை முன்வைக்கின்றனர்.

அதாவது “இல்லாத நோயை தன்னிடம் இருப்பதாக உறுதியாக நம்பிக்கை கொள்ளும் போது உடலின் அத்தனை செல்களிலும் அது பதியப்படுகின்றது.நோயின் பாதிப்புக்களை உடல் உற்பத்தி செய்கின்றது.

சென்ட் லெண்டியின் மரணம் உலகம் பூராகவும் உள்ள உளவியல் பாடநூல்களில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. காரணம் எதிர்மறை சிந்தனையே வாழ்க்கையின் எதிரி என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவேயாகும்.

இன்றைய நிலவரத்தை எடுத்து நோக்குவோம். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இக்காலகட்டத்தில் கொரொனா ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியும் கொரொனா ஏற்பட்டு மரணித்து விடுவோமோ என்ற பீதியுமே மனிதனை ஆட்டிப்படைக்கின்றது.

இத்தகைய எதிர்மறை சிந்தனையைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்வோம். ஆரோக்கியமான எண்ணங்களை மேலோங்கச் செய்வோம். கொரோனாவை விட கோரம் பலஸ்தீனில் காண்கின்றோம். இமைக்கின்ற பொழுதெல்லாம் உயிர் பிரியும் அவலம் அங்கே. ஆனாலும் பச்சிளம் குழந்தை முதல் பல்லில்லா முதியோர் வரை வைரம் பாய்ச்சிய மனதுடன் நிமிர்ந்து நிற்கின்றார்களே, அது எப்படி சாத்தியமாகின்றது.

இறைகாதலைத் தவிர வேறு எந்தவொன்றாலும் இத்தகைய மனநிலையைத் தோற்றுவிக்க முடியாது. இறைதியானங்களின் மூலம் உள்ளத்தை பக்குவப்படுத்தி பலப்படுத்திட முயற்சிப்போம். எதிர்மறை எண்ணக்கரு எனும் சிறைக்குள் இருந்து மீண்டு வந்தால் நம்பிக்கைச் சிறகுகள் கொண்டு துயரங்களை வெற்றி கொள்ளலாம். வாடும் உறவுகளுக்கு நம்பிக்கை நீர் கொஞ்சம் பாய்ச்சி விடுங்கள். ஒன்றுபடுவோம் வென்றுவிடலாம் இன்ஷாஅல்லாஹ்.

மக்கொனையூராள்

வருடம் 1980 நாடு அமெரிக்கா. சென்ட் லெண்டி என்பவருக்கு தொண்டையில் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. மருத்துவரை நாடிப் போகிறார். லெண்டியைப் பரிசோதித்த மருத்துவர் லெண்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். இது மூன்றாம் நிலைப் புற்று…

வருடம் 1980 நாடு அமெரிக்கா. சென்ட் லெண்டி என்பவருக்கு தொண்டையில் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. மருத்துவரை நாடிப் போகிறார். லெண்டியைப் பரிசோதித்த மருத்துவர் லெண்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். இது மூன்றாம் நிலைப் புற்று…